இதை பார்த்தா கண்டிப்பா சிரிப்பீங்க: இந்த அப்பாவ அடிச்சிக்க முடியாது.. வைரல் வீடியோ

Sweet Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக உங்கள் முகத்தில் புன்னகை பூக்காமல் இருக்காது. தந்தை மகள் பாச வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 31, 2023, 06:09 PM IST
  • இந்த வீடியோ ட்விட்டரில் Figen @TheFigen_ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
  • இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
இதை பார்த்தா கண்டிப்பா சிரிப்பீங்க: இந்த அப்பாவ அடிச்சிக்க முடியாது.. வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குழந்தைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது வைத்திருக்கும் அன்புக்கு ஈடு இணையே கிடையாது. தங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருக்க அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். ஒரு குடும்பத்தில் குழந்தை பிறந்தால், அந்த குடும்பத்தில் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்ல, அனைவருமே குழந்தையின் வருகையை ஒரு திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் குடும்பத்தின் கண்கள் என்பது உண்மைதான். குழந்தைகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வபோது பகிரப்படுகின்றன. 

சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ பலிரப்பட்டுள்ளது. இது இணையவாசிகளின் உணர்ச்சிகளை எழுப்பியுள்ளது என்றே கூறலாம். பலரும் இதை பற்றி தான் பேசி வருகிறார்கள். இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், ஒரு நபர் தனது பெண் குழந்தையுடன் விளையாடுவதைக் காண முடிகின்றது. அந்த நபர் ஒரு சிறு குழந்தையாகவே மாறி, அக்குழந்தையுடன் விளையாடுவதை காண வியப்பாகவும் ஆசையாகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

மேலும் படிக்க | வீட்டு வாசலில் விஷப்பாம்பு.. பக்கத்தில் குழந்தை.. திக் திக் வீடியோ வைரல்

பார்த்த உடனே முகத்தில் புன்னகை வரும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

ஒரு தந்தைக்கே உரிதான பாசத்தையும், அன்பு, அக்கறையையும் இந்த வீடியோவில் காண முடிகின்றது. குழந்தைகளிடம் அன்பு காட்டுவதில் தந்தை தாய்க்கு எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த வீடியோ நிரூபிக்கின்றது. பொதுவாக தாயன்பு பற்றியே அதிகமாக பேசப்படுகின்றது. தந்தைகள் அத்தனை அன்பு காட்டாதது போலவே சமூகம் நினைக்கிறது. ஆனால், குழந்தைகளுக்கு தெரியும் தங்கள் தந்தை தங்கள் மீது காட்டும் அன்பு பற்றி. 

வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ ட்விட்டரில் Figen @TheFigen_ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

‘அந்த குழந்தை செய்வது போலதான் என் மகனும் செய்வான்’ என ஒரு பயனர் கூறியுள்ளார். ‘இந்த வீடியோ மிக கியூட்டாக உள்ளது’ என மற்றொரு பயனர் எழுதியுள்ளார். ‘இந்த குழந்தை மிக புத்திசாலியான குழந்தை.. தனக்கு என்ன வேண்டும் என இந்த வயதிலேயே இதற்கு தெரிந்து இருக்கிறது’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘இந்த வீடியோ காண்பதற்கு மிக அழகாக உள்ளது’ என ஒருவர் தான் நினைப்பதை கமெண்ட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். 

சமீபத்தில் வைரல் ஆன மற்றொரு குழந்தைகள் வீடியோ:

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ஒரே அலப்பறையா இருக்கே.. தலைக்கு ஏறிய போதை, ஓடும் காரில் புஷ் அப்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News