வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு காதலர்களின் வீடியோக்கள் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.  அந்தவகையில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உணர்ச்சிகரமான பெண்
இந்த நிலையில் இங்கு வைரலாகி வரும் வீடியோவை பார்க்கும் போது, காதல் ஜோடிகள் சாலையோரம் நின்றுகொண்டிருக்கிறது. வாட்டும் வெயிலின் காரணமாக இவர்கள் இருவரின் ஸ்கூட்டர்களும் மரத்தடியில் நின்றிருப்பதை நாம் காணலாம். பிறகு தனது காதலனின் நெற்றியில் வழிந்த வியர்வையை கண்டு காதலி மிகவும் உணர்ச்சிவசப்பாடுகிறார். உடனே தனது கையில் இருந்த கர்சீப்பை அல்லது கைக்குட்டையை எடுத்து காதலனின் நெற்றியில் வழிந்த வியர்வையை அக்கறையுடன் துடைக்க ஆரம்பிக்கிறாள். 


மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்


காதலியின் இந்த செயலால் வெட்கப்பட்ட காதலன் இப்படி செய்யாதே என்று கூறுகிறார். இருப்பினும் அவர் கூறியதை கந்துக்கொள்ளாமல் காதில் தனது காதலனின் முகத்தில் வழித்துக்கொண்டு இருந்த வியர்வையை சுத்தம் செய்து கொண்டே இருக்கிறாள். வீடியோ பிரேமில் உள்ள இந்த காட்சி மிகவும் அழகாக இருக்கிறது. மேலும் இந்த காட்சியை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தனது கேமராவில் படம் பிடித்துள்ளார், அத்துடன் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிகமான பார்வையார்களை பெற்றுள்ளது. மேலும் லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர். இதைப் பார்த்து சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டால், சிலருக்கோ சிரிப்பு வருகிறது.


நடுரோட்டில் கொஞ்சிக்கொள்ளும் காதலர்களின் வீடியோவை இங்கே காணலாம்: 


 



 


இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் பரவி வருகிறது. அதன்படி இந்த வீடியோ psycho_biharii2 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.