வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. 


சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன. 


திருமணம் என்பது மணமகனுக்கும் மணமகளுக்கும் மிக முக்கியமான ஒரு நாளாகும். இதற்காக அவர்கள் பல ஏற்பாடுகளை செய்வதுண்டு. தங்கள் உடை, மண்டபத்துக்குள் வரும் விதம், நடனங்கள் என அனைத்திலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எனினும், சில சமயம், எதிர்பாராத சில விஷயங்களும் தனித்துவமான அனுபவங்களை அளிக்கின்றன. 


சில சமயங்களில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில திருமண வீடியோக்களின் வீடியோக்களில் சிலவற்றைப் பார்த்தவுடன் சிரிப்பு வரும், மனம் மகிழும். தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது. அந்த வேடிக்கையான வீடியோ மணமகள் மற்றும் அவரது தோழருடன் தொடர்புடைய வீடியோ ஆகும். இதில் வரும் வேடிக்கையான விஷயங்கள் இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் மீண்டும் பார்க்கத்  தூண்டுகிறது. 


மணப்பெண்ணின் ஆட்டத்தைப் பார்த்து உற்சாகமான நபர் 


சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோ-வில், ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் மணமண்டபத்துக்கு வந்து விட்டதை காண முடிகின்றது. மணமகனும் மணமகளும் மேடையில் அமர்ந்துள்ளனர். அப்போது பின்னணி இசை ஒலிக்கத் தொடங்குகிறது. 


மேலும் படிக்க | கொடிய நாகப்பாம்பை கூலாக காப்பாற்றிய நபர்: இணையத்தில் வைரல் ஆன வீடியோ 


இசையைக் கேட்ட மணமகள் திருமண நாற்காலியில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்குகிறார். மணப்பெண்ணின் அசத்தல் நடனத்தால் அருகில் இருந்த ஒரு நபரும் உற்சாக மிகுதியில் அவர் அருகில் சென்று ஆடத்தொடங்குகிறார். அப்போது மணமகனின் ரியாக்‌ஷனை பார்க்க மிகவும் வேடிக்கையாக உள்ளது. இதன் பிறகு வீடியோவில் நடப்பதை பார்த்தால், பார்ப்பவர்களுக்கு சிரிப்பு நிற்காது. 


குத்தாட்டம் போட்ட மணமகளின் வீடியோவை இங்கே காணலாம்: 



அந்த வீடியோ எப்போது, ​​எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும், இப்போது இது பல்வேறு சமூக ஊடக தளங்களில் அதிக அளவில் பார்க்கப்படுகிறது. இது இன்ஸ்டாகிராமில் wedabout என்ற கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.


மணமகளின் உற்சாகம், மகிழ்ச்சி என அனைத்தும் வீடியோவை பார்ப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 


மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR