இதுதான் உண்மையான `கேட் வாக்`... மாடல்களுக்கே சவால் விடும் பூனை!
மாடல் அழகிகள் கேட் வாக் வருவதை போல பூனை ஒன்று அழகாக ஒரு குச்சியில் எவ்வித பயமுமின்றி நடந்து வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஃபேஷன் ஷோக்களில் மாடல் அழகிகள் அணிவகுத்து வருவதை 'கேட் வாக்' என்று சொல்லுவோம், அந்த நடை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். நிஜமான கேட் வாக் எப்படி இருக்கும் என்பதை இங்கு இணையத்தில் வைரலாகி வரும் ஒரு பூனையின் நடை காண்பிக்கிறது. பண்டைய காலங்களில் பூனைகள் தெய்வங்களாக இருந்த பூனைகள் தற்போது பலரின் குடும்ப உறுப்பினராக மாறிவிட்டது. தினசரி இணையத்தில் நாம் காணுகின்ற பூனைகளின் சேட்டைகள், கோமாளித்தனங்கள், குறும்புகள் மற்றும் சில அறிவார்ந்த செயல்கள் அனைத்தும் நம்மை மகிழ்ச்சியாகவும், வியப்பில் ஆழ்த்துபவையாகவும் அமைத்துள்ளது. மற்ற பொழுதுபோக்கான வீடியோக்களை காட்டிலும் பெரும்பாலான மனிதர்களுக்கு விலங்குகளின் வீடியோக்கள் பிடித்துப்போய்விடுகிறது.
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த பூனையின் வீடியோவானது ட்விட்டரில், யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு மேஜையின் மீது கொழுகொழுவென்று பூனை ஒன்று நிற்பதை காண முடிகிறது. பூனை நிற்கக்கூடிய மேஜைக்கு நேரெதிரே மற்றொரு மேஜை இருக்கிறது, அந்த இரண்டு மேஜையையும் இணைப்பது போன்று இடையில் ஒரு குச்சி வைக்கப்பட்டுள்ளது. அந்த பூனை, எவ்வித பயமுமின்றி அந்த ஒற்றை குச்சியின் மேல் அழகாக நடந்து வந்து மற்றொரு மேஜைக்கு வந்து கெத்தாக நிற்கிறது. பூனையின் வீடியோவிற்கு பின்னணியில் சேர்க்கப்பட்டுள்ள இசை வீடியோவுக்கு கூடுதல் பலம் அளிப்பதாக உள்ளது.
மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்?
இணையத்தில் கடந்த ஆகஸ்ட்-8ம் தேதி பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவை இதுவரை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர். இதுவரை இந்த வீடியோவிற்கு பன்னிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது, மேலும் கமெண்ட் செக்ஷனில் பலரும் சிரிப்பு எமோஜிகல் மற்றும் பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ