Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியொ இணையத்தை கலக்கி வருகின்றது.


வனவிலங்குகளின் சில வீடியோக்கள் மக்களை முற்றிலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. சில வீடியோக்களை பார்த்தால் நம்மால் நம் கண்களையே நம்ப முடியாது. 


தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் வீடியோவில், ஒரு பெண் 6 சிங்கங்களுடன் காட்டில் சாவகாசமாக நடந்து செல்வதைக் காண முடிகின்றது. இந்த வீடியோவைப் பார்த்தது அனைவரும் அதிர்ச்சியடைவார்கள் என்பது உறுதி. 


பொதுவாக சிங்கத்தை தூரத்தில் இருந்து பார்த்தாலே மக்கள் அச்சப்படுவது உண்டு. அருகில் செல்ல யாரும் எண்ணிக்கூட பார்க்கமாட்டார்கள். ஆனால் இந்த வீடியோவில், ஒரு பெண், ஆடு மாடை மேய்த்துக்கொண்டு போவதுபோல, சிங்களுக்கு பின்னால் மிகவும் சாதாரணமாக நடந்து செல்வதைக் காண முடிகின்றது. சிங்கங்களை கட்டுப்படுத்தி அவர் நடந்துசெல்லும் விதம் பார்க்க வேண்டியதொரு அற்புத காட்சியாக உள்ளது.


ALSO READ | Viral Video: கொச்சியில் சாலையை மெதுவாக கடந்து சென்ற மலைப்பாம்பால் பரபரப்பு..!!


6 சிங்கங்களுடன் அசால்டாய் நடக்கும் பெண் 


வைரலாகி வரும் இந்த வீடியோவில் (Viral Video), காட்டில் ஒரு பெண் 6 பெண் சிங்கங்களுடன் சாலையில் செல்வதைக் காண முடிகிறது. பெண் சிங்கங்களும் அந்த பெண்ணுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல், அவர் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து செல்கின்றன. சிங்கங்கள் பெண்ணுக்கு கட்டுப்பட்டு இருப்பதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது. 


இந்த வீடியோ ஒரு காட்டில் படமாக்கப்பட்டுள்ளது. சிறுமியுடன் இணைந்து இந்த காட்சியை எந்த பயமும் இல்லாமல் படமாக்கிய கேமராமேனை நெட்டிசன்கள் (Netizens) வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். 


அட்டாகாசமான அந்த வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோவை பார்த்த மக்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். வனவிலங்குகள் தொடர்பான இந்த வீடியோ safarigallery என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவின் தலைப்பில், "ஒவ்வொரு முறையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து பயத்தை நீக்கும் ஒரு செயலை செய்து பாருங்கள். முயற்சி செய்வீர்களா?" என்று எழுதப்பட்டுள்ளது. 


 


வீடியோவுடன் பல தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் சிங்கங்கள், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் காணப்பட்டதாகவும், ஆனால் இப்போது சில வகைகள் ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன என்றும், மீதமுள்ள ஆசிய சிங்கங்கள் இந்தியாவில் உள்ள சாசன்-கிர் தேசிய பூங்காவில் காணப்படுகின்றன என்றும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ALSO READ | குத்தாட்டம் போட்ட மணமகன், வேற லெவலில் ஈடு கொடுத்து ஆடிய மணமகள்: வைரல் வீடியொ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR