காதலியுடன் டேட்டிங், திடீரென நடுரோட்டில் விசித்திர செயல்: வீடியோ வைரல்
Viral Video Of Girl Friend Behavior: காதலுடன் டேட்டிங் வந்த பெண் ஓட்டல் மற்றும் நடுரோட்டில் விசித்திரமான விஷயங்களைச் செய்யத் தொடங்கினார்.
காதலர்களின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. காதலர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. காதலர்களின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ காதலன் மற்றும் காதலியுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. இதில் காதலுடன் டேட்டிங் வந்த பெண் ஓட்டல் மற்றும் நடுரோட்டில் விசித்திரமான விஷயங்களைச் செய்யத் தொடங்கினார்.
சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த நீங்கள் அந்த பெண் ஏன் இப்படி செய்திருப்பார் என்று நினைக்கலாம். ஏனெனில் அந்த நபர் தனது முதல் டேட்டை வீடியோ கேமில் தோன்றும் பெண்ணை போல் பிக்ஸ் செய்து இருந்தார். எனவே அந்தப் பெண் தனது காதலனை சந்திக்க வந்தபோது, வினோதமாக நடந்து கொள்ள ஆரம்பித்தாள்.
மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ
டேட்டிங்கில் பெண்ணின் செயலைக் கண்டு அந்த நபர் ஆச்சரியப்பட்டார்
அந்த பெண் உண்மையான கேமிங் கேரக்டரா அல்லது உண்மையான மனிதனா என்பதை வீடியோ சிந்திக்க வைக்கும். இந்த வைரலான வீடியோவை போலந்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் நிக்கி மற்றும் லோக்செக் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். கேமிங் உலகில் ஒரு 'டேட்' என்கிறது போல் அந்த பெண் NPC ஆக செயல்படுவதை இந்த வீடியோ காட்டுகிறது. வீடியோவின் தொடக்கத்தில் ஒரு பெண் சாலையில் நடுங்குவதை நாம் காணலாம். அதேபோல் இந்த வீடியோவின் மேலே ஒரு டெக்ஸ்ட் எழுதப்பட்டுள்ளது - அதில், 'NPC உடன் முதல் டேட்டிங்'என்று எழுதப்பட்டு இருந்தது.
நடுரோட்டில் காதலியின் விச்சித்திர செயல் வீடியோவை இங்கே காணலாம்:
சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் எல்லாம் வேடிக்கையாகத் தெரிகிறது, அதைக் கண்டு உங்களால் சிரிப்பதை நிறுத்தவே முடியாது. அதன்படி இந்த வீடியோ @loczniki_official என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஜூலை 6 அன்று வெளியிடப்பட்டது மற்றும் எட்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்த வீடியோ தற்போது வரை பெற்றுள்ளது. மேலும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.