வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமண அலப்பறைகள்


சமூக ஊடகங்களில் தினமும் திருமணங்களின் பல வேடிக்கையான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கின்றன. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும், சில சமயம் அடி உதை என மணமேடையே அல்லோலப்படுவதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால், தற்போது மிக வினோதமான ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் நமக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. 


பல்வேறு சமூக ஊடக தளங்களில் திருமணம் தொடர்பான நகைச்சுவையான வீடியோக்கள் பல பகிரப்படுகின்றன.  இவற்றில் சில மிகவும் வேடிக்கையாகவும், சில ஆச்சரியம் அளிக்கும் வகையிலும், சில அதிர்ச்சியளிக்கும் வகையிலும் உள்ளன. சில வீடியோக்களில் மணமகனும் மணமகளும் தாங்கள் செய்யும் சில செயல்களால் நம் நெஞ்சங்களில் எப்போதும் நிலைத்து நின்றுவிடுகின்றனர். தற்போது வெளியாகியுள்ள வீடியோ நம்மை சிரிக்க வைப்பதோடு ஆச்சரியப்படவும் வைக்கின்றது. 


இந்த வினோதமான வீடியோவில் மாப்பிள்ளை தனக்கு திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மிகுதியான குஷியுடன் நடனமாடுகிறார். ஆனால், மணமகனுடன் சேர்ந்து நடனமாட மாமியார் மேடைக்கு வரும்போதுதான் வீடியோவில் ட்விஸ்ட் ஏற்படுகின்றது. 


மேடையில் கலக்கிய மாப்பிள்ளை மாமியார் ஜோடி


வீடியோவில் ஒரு திருமண மேடையில் மணமகனும் மணமகளும் நின்று கொண்டிருப்பதை காண முடிகின்றது. தனது திருமணம் குறித்து மாப்பிள்ளை எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது அவர் முகத்திலேயே அப்பட்டமாக தெரிகின்றது. தனது மகிழ்ச்சியை அடக்கமாட்டாமல் அவர் மேடையிலேயே ஆடத் தொடங்குகிறார். மணமகனை பார்த்ததும் மணமகளாலும் அமைதியாக இருக்க முடியவில்லை. அவரும் தனது ஆடைகளை சரி செய்துகொண்டு மணமனுடன் ஆட தயாராகிறார். ஆனால் அவர் முழு வீச்சில் ஆடத் தொடங்கியபோது மேடையில் ஒரு ட்விஸ்ட் ஏற்படுகின்றது.


மணமகளின் தாய், அதாவது மாப்பிள்ளையின் மாமியார் ஒரு வேகத்துடன் மேடைக்கு வருகிறார். அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அவர் மாப்பிள்ளையுடன் சேர்ந்து ஆடத் தொடங்குகிறார். மணமகள் தயங்கிக்கொண்டிருக்க மாமியாரோ எடுத்த எடுப்பிலேயே அசால்டாக மாப்பிள்ளைக்கு ஈடு கொடுத்து ஆடத் தொடங்குகிறார். மாப்பிள்ளை மற்றும் மாமியாரின் ஆட்டத்தால் மேடையே களைகட்டுகிறது. இது பார்ப்பதற்கு மிக வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.


மேலும் படிக்க | ஏய் இது பாம்பு டான்ஸ்ப்பா! பாங்கரா இல்லை! கன்ஃப்யூஸ் ஆன சீக்கிய டான்சர்கள்


மணமேடையில் மாமியாரால் வந்த ட்விஸ்ட்டின் வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ வைரல் ஆனது:


மணமகன் தனது மாமியாருடன் நடனமாடும் வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @bridal_lehenga_designn என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'இது என்ன புது கூத்தா இருக்கு?' என ஒரு பயனர் எழுதியுள்ளார். 'அந்த பொண்ணு பாவம்.. அவர் முகத்தை பார்க்க முடியல' என மற்றொரு பயனர் கமெண்டு செய்துள்ளார். 'மாப்பிள்ளையின் குஷி அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது' என மற்றொருவர் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | மேடையில் மணமக்கள் செய்த வேலை.. யார் தடுத்தும் நிறுத்தல: வேற லெவல் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ