மேடையில் மணமக்கள் செய்த வேலை.. யார் தடுத்தும் நிறுத்தல: வேற லெவல் வைரல் வீடியோ

Funny Wedding Video: தற்போது மணமக்களின் ஒரு பரிதாபமான வீடியோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்தால் கண்டிப்பாக நமக்கு அதிர்ச்சிதான் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 2, 2023, 12:33 PM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @ bridal_lehenga_designn மே 31 அன்று என்ற பக்கத்தில் பகிரப்பட்டது.
  • இந்த வீடியோவுக்கு இதுவரை 33,000 -க்கும் மேற்பட்ட வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மேடையில் மணமக்கள் செய்த வேலை.. யார் தடுத்தும் நிறுத்தல: வேற லெவல் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

சமூக ஊடகங்களில் தினமும் பல வேடிக்கையான திருமண வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கின்றன. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால், தற்போது மணமக்களின் ஒரு பரிதாபமான வீடியோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்தால் கண்டிப்பாக நமக்கு அதிர்ச்சிதான் கிடைக்கும். 

தற்போது வைரல் ஆகியுள்ள இந்த வீடியோ நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒன்றாக அளிக்கின்றது. திருமணங்களில் சண்டைகள் நடப்பது சகஜம்தான். ஆனால், இந்த வீடியோவில் சண்டை நடப்பதே மணமக்களுக்கு இடையில்தான். இது மிக வியப்பாக உள்ளது. அதுவும் சில அற்ப விஷயங்களுக்காக சண்டையிடும் இந்த ஜோடியை பார்த்தால் நமக்கு பரிதாபமே மேலோங்குகிறது. 

வீடியோவில் துவக்கத்தில் மணமகனும், மணமகளும் மேடையில் நிற்பதைக் காண முடிகின்றது. அங்கே உள்ள சூழலும் மிக நன்றாக மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், திடீரென மணமகள் மணமகனை அறைவதைக் காண்கிறோம். கோபமடைந்த மணமகனும் மணப்பெண்ணை திருப்பி அடிக்கிறார். இந்த கைகலப்பு விரைவில் முழு வீச்சில் சண்டையாக மாறுகிறது. இவர்களது சண்டை அங்கு இருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியை அளிக்கின்றது.

மேலும் படிக்க | ஆட்டோவில் கூலர்: இந்த ஆட்டோக்கார அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க... வைரல் வீடியோ

விலக்கி விட முயன்ற உறவினர்கள்

மணமக்களின் சண்டையை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்களும் நண்பர்களும் அவர்களை விலக்கி விட முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்களாலும் அது முடியவில்லை. தங்கள் பரம எதிரியுடன் சண்டை போடுவது போல, மணமகன், மணமகள் இருவருமே முழு வீச்சில் சண்டை போட்டனர். 

திருமண நாளில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய திருமண ஜோடி இப்படி சண்டை போட்டது அனைவருக்கும் வருத்தமாக இருந்தது. இருந்தாலும், தங்கள் கையில் எதுவும் இல்லை என்பது அவர்களது வருத்தத்தை இன்னும் அதிகமாக்கியது. 

மேலும் படிக்க | இதென்னடா கராத்தே மாஸ்டருக்கு வந்த சோதனை - வைரல் வீடியோ

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @ bridal_lehenga_designn மே 31 அன்று என்ற பக்கத்தில் பகிரப்பட்டது. இந்த வீடியோவுக்கு இதுவரை 33,000 -க்கும் மேற்பட்ட வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

பல சமூக ஊடக பயனர்கள் இந்த வீடியோவை பார்த்து குலுங்க குலுங்க சிரிக்கிறார்கள். ‘இப்பவே ஆரம்பம் ஆயிடுச்சா!!’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘இவங்க ஜோடி சூப்பர் ஜோடு’ என மற்றொரு பயனர் எழுதியுள்ளார். ‘இங்கு திருமணம் நடக்கிறதா அல்லது விவாகரத்து நடக்கிறதா?’ என ஒருவர் கேட்டுள்ளார். ‘இது ஒரு போலி நடிப்பு போல தெரிகிறது. ஸ்க்ரிப்டட் வீடியோ’ என ஒருவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | கூல் ட்ரிங்சில் அதை கலந்த நண்பர்கள்.... மணமகனின் அப்பாவி ரியாக்‌ஷன்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News