Viral Video: மணமேடையில் துப்பாக்கி... சோகத்தில் முடிந்த விளையாட்டு!
Shocking Wedding Viral Video: திருமண மேடையில் தேவையற்றதை எல்லாம் வெறும் சமூக ஊடக கவனிப்பிற்காக செய்வதன்மூலம், சில சம்பவங்கள் சோகத்தில் முடிய வாய்ப்புள்ளது. உதாரணமாக இந்த வைரல் வீடியோவை சொல்லலாம்.
Shocking Wedding Viral Video: பளபளக்கும் துப்பாக்கியுடன், சமூக வலைதள கவனத்திற்காக மணமகள் செய்த காரியம் ஒன்று, மிகவும் தவறாகிபோனது. மணமகனும், மணமகளும் தங்கள் திருமண மேடையில் பளபளக்கும் துப்பாக்கிகளுடன் போஸ் கொடுப்பதை இந்த வைரல் வீடியோவில் காணலாம். இருப்பினும், அந்த ஸ்டண்ட் தவறாகி, மணமகளின் முகத்தில் பதம்பார்த்தது.
ட்விட்டர் பயனர் அதிதி என்பவர் இந்த வீடியோவைப் பகிர்ந்து அதில், "இந்த நாட்களில் மக்களுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. அவர்கள் திருமணங்களை பெரும் விருந்துகளைப் போலவே நடத்துகிறார்கள், இதனால் அவர்கள் தங்கள் நல்ல நாளையும் மோசமான நாளாக்கிவிடுகின்றனர்.
மேலும் படிக்க | மணமேடையில் தீ: சூப்பரா உதவிய அண்ணன், சும்மாவே நின்ற மாப்பிள்ளை, வீடியோ வைரல்
13 வினாடிகள் கொண்ட வீடியோவில், மணமகள் மற்றும் அவரது கணவர் ஜேம்ஸ் பாண்ட் போல் பளபளக்கும் துப்பாக்கிகளுடன் போஸ் கொடுப்பதைக் காணலாம். இருப்பினும், மணமகளின் பளபளப்பான துப்பாக்கி வெடித்து மணமகளின் முகத்தில் காயம் ஏற்படுத்தியது. அவள் ஆடையில் தீப்பிடிக்கும் முன், அவள் மின்னும் துப்பாக்கியை கீழே எறிந்துவிட்டு மணமகனை நோக்கி ஓடுகிறாள்.
நல் வாய்ப்பாக, மணமகளுக்கு எதுவும் ஆகவில்லை. இணையத்தில் பகிரப்பட்டதில் இருந்து, இந்த வீடியோ லட்சத்திற்கும் மேலான வியூஸ்களுடன் மிகவும் வைரலாகியுள்ளது.“சமூக ஊடக மதிப்பு ஏன் மிகவும் முக்கியமானது என்று தெரியவில்லை. இன்ஸ்டாகிராம் ரீல்களுக்கு திருமணம் மாறியுள்ளது. அதனால்தான் இந்தியாவில் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன என்று யூகிக்க முடிகிறது. தம்பதிகள் திருமணத்திற்கான வேலைகளை செய்வதை விட சமூக வலைத்தள மதிப்பிற்கு கூடுதல் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.
மேலும் ஒருவர்,"இது அபத்தமானது, சுற்றுச்சூழலில் ஏற்கனவே இருக்கும் ஆபத்துகளுடன் இதுபோன்று விபத்து அபாயங்களைச் சேர்ப்பது. சமூக ஊடக பதிவுகள் 2 நிமிட விவகாரம், விரைவில் மறந்துவிடும். ஆனால் ஒரு வாழ்க்கை என்றென்றும் வடுவாகிவிடும்" என பதிவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ