மணமேடையில் தீ: சூப்பரா உதவிய அண்ணன், சும்மாவே நின்ற மாப்பிள்ளை, வீடியோ வைரல்

Shocking Wedding Video: அண்ணன் தங்கை பாசத்தை காட்டும் ஒரு அசத்தலான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 1, 2023, 10:45 AM IST
  • திடீரென மணமேடையில் தீ.
  • ஓடிவந்து தீயை அணைத்த மணமகளின் அண்ணன்.
  • மாப்பிள்ளை என்ன செய்தார் தெரியுமா?
மணமேடையில் தீ: சூப்பரா உதவிய அண்ணன், சும்மாவே நின்ற மாப்பிள்ளை, வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

திருமணங்களில் நடக்கும் சில சுவாரசியமான விஷயங்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்க்கின்றன. இதில் சில சமயம் மணமக்களுக்கு இடையில் இருக்கும் அற்புதமான பாசமும், காதலும் காணக்கிடைக்கும். சில சமயம் இருவரும் பயங்கரமாக சண்டையிட்ட காட்சிகளையும் நாம்  பார்த்துள்ளோம். சில சமயம் மணமகள் தன் பிறந்த வீட்டு சொந்தங்களை மறக்க முடியாமல் தவிப்பதும் உண்டு. இவர்களுக்கு இடையில் இருக்கும் பாசப்பிணைப்பை காட்டும் பல வீடியோக்களையும் நாம் கண்டுள்ளோம். 

தற்போதும் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள வீடியோ இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இதில் ஒரு திருமணத்தில் மாலை மாற்றும் நிகழ்வின்போது மணமேடையில் தீப்பிடித்து விடுகிறது. தீயால் தேனும் சேதம் ஏற்படுவதற்கு முன், மணமகளின் சகோதரர் நிலைமயை சமாளித்து தீயை அணைக்கத் தொடங்கினார். ஆனால் மாப்பிள்ளையோ அமைதியாக நின்று அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கின்றது. 

மேலும் படிக்க | Peeing Elephant: மோட்டர் போட்டது போல மூத்திரம் போற யானைய பாத்ததுண்டா? வீடியோ வைரல் 

மணமேடையில் தீப்பிடித்தது

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மாலை அணிவிக்க மேடைக்கு வருவதை காண முடிகின்றது. மேடை மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மணமகன் மாலை அணிவிக்க மணப்பெண்ணின் அருகில் வரும்போது மேடையில் உள்ள மேல் அலங்காரத்தில் தீப்பற்றி இருப்பது தெரியவருகிறது. 

இதைப் பார்த்த மணப்பெண்ணின் சகோதரர் உடனடியாக மேடைக்கு வந்து தன் சூட்  ஜாக்கெட்டால் தீயை அணைக்கத் தொடங்குகிறார்.

தங்கைக்காக தீயை அணைத்த அண்ணனின் வீடியோவை இங்கே காணலாம்: 

சிறிது நேரம் கழித்து மணமகளின் சகோதரருக்கு உதவ மேலும் பலர் மேடைக்கு வருகிறார்கள். ஆனால் மணமகன் தன் இடத்தை விட்டு அசையக்கூட இல்லை. மணமகளை பிடித்துக்கொண்டு அப்படியே நிற்கிறார். மணமகனின் இந்த நடத்தை அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில்  sachkadwahai என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். மணமகளின் அண்ணனின் சகோதர பாசத்தையும் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். 

மேலும் படிக்க | இரண்டு சிங்கங்களின் வேட்டையில் சிக்கிய இளைஞர் - அடுத்து என்ன நடந்தது? வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News