Instagram Famous Girl Suicide: திருவள்ளூர் பெரியகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் தம்பதியினர், இவர்களுக்கு ஒரு மகனும், நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது பிரதிக்ஷா என்ற மகளும் உள்ளனர். பிரதிக்ஷா திருவள்ளூர் RMJAIN மெட்ரிக் மேல்நிலை பள்ளி என்ற தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
சிறுமி பிரதிக்ஷா இன்ஸ்டாவில் தனக்கென ஒரு ஐடியை கிரியேட் செய்து அதில் 50க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து பதிவேற்றியுள்ளார். இந்த ரீல்ஸ்கள் மூலம் திருவள்ளூர் பகுதியில் இன்ஸ்டா புகழ் சிறுமியாகவே பிரதிக்ஷா பலரால் அறியப்பட்டு வந்தார்.
பெற்றோர் கண்டிப்பு
இந்த நிலையில், நேற்று (மார்ச் 29) இரவு சுமார் 8 மணி அளவில் சிறுமி பிரதிக்ஷா தனது பாட்டி வீட்டின் எதிரில் விளையாடிக் கொண்டிருந்தார் என கூறப்படுகிறது. இதனை கண்ட பிரதிக்ஷாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் கற்பகம் ஆகியோர் சிறுமியை விளையாடியதுபோதும் வீட்டிற்கு சென்று படிக்கும்படி கண்டித்து வீட்டின் சாவியை சிறுமி பிரதிக்ஷாவிடம் கொடுத்துவிட்டு, இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக தாயும் தந்தையும் தனது மகனுடன் சென்று வீடு திரும்பி உள்ளனர்.
பிரதிக்ஷா ரீல்ஸ் வீடியோ:
மேலும் படிக்க | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய இருவருக்கு போலீஸ் காவல்
இந்நிலையில் வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்ததால் பலமுறை சிறுமி பிரதிக்ஷாவின் பெயரை அழைத்து தந்தை கதவை தட்டியும் திறக்கவில்லை. பயந்து போன தந்தை கிருஷ்ணமூர்த்தி ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது, சிறுமி தூக்கிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று குழந்தையை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் மருத்துவர்கள் குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சையில் பலவிதமாக அளித்தும் குழந்தை ஒரு மணி நேர முயற்சிக்குப் பின் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் சிறுமி உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இன்ஸ்டாவில் பல பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து திருவள்ளூர் பகுதியில் பெரும் புகழை பெற்று இன்ஸ்டா குயின் சிறுமையாக அறியப்பட்ட பிரதிக்ஷா உயிரிழந்த சம்பவத்தால் சிறுமியின் குடும்பத்தினர் உறவினர் மட்டுமல்லாமல் திருவள்ளுவர் நகரத்தையே பெரும் சோகத்தில் ஆழ்ந்தியுள்ளது.
(தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)
மேலும் படிக்க | நெல்லையில் தந்தையை கவனிக்காத மகன்கள் கைது: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ