வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


திருமணங்களில் பல வித சடங்குகள் நடக்கின்றன. இந்த சடங்குகளின் போது பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண முடிகின்றது. இவற்றில் சில சம்பவங்களை மக்கள் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து சிரிப்பதுண்டு. 


மேலும் படிக்க | ஸ்கூட்டியில் மாஸ் காட்டும் மணப்பெண்: மயங்கிப்போன நெட்டிசன்கள் 


விருந்தினர்களுக்கு மட்டுமல்லாமல் மணமக்களிடையேயும் சில சமயம் வேடிக்கையான சம்பவங்கள் நடக்கின்றன. இதைப் போன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில், மாலை மாற்றும் நிகழ்வின் போது பலர் கூடி இருக்க, மணமேடையில், மாப்பிள்ளையின் பேன்ட் அவிழ்ந்து விடுகிறது. அக்காட்சியைப் பார்த்த விருந்தினர்களாலும், மணமகளாலும் தங்களது சிரிப்பை அடக்க முடியவில்லை. 


இது என்ன கொடுமை!! 


சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமகன் ஊர்வலம் மணப்பந்தலில் வந்துவிட்டதையும், மாலை மாற்றும் நிகழ்வுக்காக மணமகன் மணமகளுடன் மேடைக்கு சென்றிருப்பதையும் காண முடிகின்றது. மணமகள் மணமகனுக்கு மாலை அணிவித்த உடனேயே மணமகனின் பேண்ட் அவிழ்ந்துவிடுகிறது. 


மணமகனின் இந்த நிலையை பார்த்து திருமணத்துக்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களும் சிரிக்கத் துவங்குகிறார்கள். விருந்தினருடன் சேர்ந்து மணப்பெண்ணும் கடுப்படுத்த முடியாமல் சிரிக்கிறார். நிரம்பிய கூட்டத்தில், மணமகன் வெட்கப்படும் அளவுக்கு அனைவரும் சிரிக்கின்றனர். தற்போது இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. 


மணமகனின் பேண்ட் அவிழ்ந்த வேடிக்கை வீடியோவை இங்கே காணலாம்: