வீட்டுக்கு வா உனக்கு இருக்கு.. ஊர் சுற்ற போன மகனை கூட்டி செல்லும் அம்மா சிங்கம்!
சிங்கக்குட்டி ஒன்று வெளியில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பதை தாய் சிங்கம் தேடி சென்று வழிமறித்து அழைத்துக்கொண்டு வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இளம்வயதில் உள்ள பலரும் வீட்டுக்கு தெரியாமல் ஊர் சுற்றுவது இயல்பான ஒன்று, மனிதர்கள் தான் அப்படி சுற்றி திரிவதை பார்த்திருப்போம். ஆனால் விலங்குகளும் அதன் குடும்பத்தினருக்கு தண்ணீர் காட்டிவிட்டு ஊர் சுற்றுகிறது என்பது தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று காண்பிக்கிறது. இணையத்தில் இதுபோன்று தினமும் நாம் காணும் பல நிகழ்வுகள் நம்மை அறியாமலேயே மனதிற்குள் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி விடுகிறது. அப்படிப்பட்ட வீடியோ தான் இப்பொது நம்மை சிரிக்க வைக்க இணையத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.
இந்த அழகான வீடியோவானது வழக்கம்போல அதிகளவில் விலங்குகளின் அழகழகான காட்சிகளை ரசிகர்களின் பார்வைக்கு விருந்தளிக்கும் யோக் என்கிற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு பக்கமும் புற்கள் சூழ்ந்து அழகான சாலை போடப்பட்டது போன்று அமைக்கப்பட்ட பாதையில் சிங்கம் ஒன்று கம்பீரமாக நடந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த சிங்கத்தின் அருகில் அதன் குட்டி சிங்கம் ஒன்றும் கூடவே நடந்து வருகின்றது, சிங்கம் இவ்வளவு வேகமாக வேட்டையாட செல்கிறதோ என்று நினைத்தால் இல்லை. அங்குதான் ஒரு ட்விஸ்ட் உள்ளது, அந்த சிங்கத்தின் குட்டி ஒன்று வெளியில் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறது, அந்த சிங்கத்தை தேடி அதன் இருப்பிடத்திற்கு அழைத்து வருவதற்கு தான் அந்த சிங்கம் செல்கிறது என்பது வீடியோவை முழுமையாக பார்த்ததும் தெரியவருகிறது. அந்த குட்டி சிங்கத்தை தாய் சிங்கம் இடைமறித்து வாயால் ஒரே கவ்வாக கவ்விக்கொண்டு இருப்பிடத்தை நோக்கி நடந்து செல்கிறது.
மேலும் படிக்க | இதுதான் உண்மையான 'கேட் வாக்'... மாடல்களுக்கே சவால் விடும் பூனை!
இந்த வீடியோ பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கிறது, இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவை பார்த்து சிரித்து வருகின்றனர். இணையத்தில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவை இதுவரை இருபத்தி மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவிற்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.
மேலும் படிக்க | 'போன் வேணும்...' அடம் பிடிக்கும் குட்டி, அடக்கும் அம்மா குரங்கு: கியூட் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ