வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திறந்த வெளியில் சஃபாரி சென்று, காட்டு விலங்குகளை அருகில் காண அனைவரும் விரும்புவார்கள். உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால், இந்த வீடியோ உங்களுக்கு சின்ன கலக்கத்தை ஏற்படுத்தலாம். சஃபாரியில் சுமார் ஒரு டஜன் சுற்றுலா பயணிகள் சென்ற ஒரு வாகனத்தில் திடீரென சிங்கம் ஒன்று குதித்ததை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. 


இந்த வீடியோ சஃபாரியில் இருந்த ஒரு சுற்றுலா பயணி எடுத்த வீடியோவாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. வைரலாகியுள்ள இந்த வீடியோ காண்பவர்களை திகிலூட்டும் வகையில் உள்ளது. வீடியோவில், பல சுற்றுலா பயணிகள் ஒரு சஃபாரி வண்டியில் வனப்பகுதியில் செல்வதை காண முடிகின்றது. அப்போது தூரத்தில் ஒரு சிங்கம் செல்வதையும் காண முடிகின்றது. 


பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, அந்த சிங்கம் திடீரென சஃபாரி வண்டிக்குள் துள்ளி குதிகிறது. இதனால் வாகனத்தில் இருந்தவர்கள் கதிகலங்கி விடுகிறார்கள். எனினும், அந்த சிங்கம் யாரையும் தாக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயமாகும். அது வாகனத்தில் உள்ள அனைவருடனும் தோழமையுடன் பழகுகிறது. 


மேலும் படிக்க | போதையில் மீனவர் செய்த செயல், கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு: திக் திக் வைரல் வீடியோ 


சிங்கம் ஆசையாக நடந்துகொள்வதை பார்த்த மக்களும் அச்சம் நீங்கி, அதை பாசத்தோடு தடவிக்கொடுக்கிறார்கள். அதற்கும் அந்த அன்பும் பாசமும் தேவைப்படுகிறது. அந்த சிங்கம் வாகனத்தில் குதித்தவுடன் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியிருக்கலாம். ஆனால், சிங்கத்தின் மனநிலை நன்றாக இருந்ததால், அது சஃபாரி செய்த மக்களுக்கு மறக்க முடியாத, சிலிர்ப்பான ஆனால் அற்புதமான அனுபவமாக மாறியுள்ளது.


இந்த வீடியோ நெட்டிசன்களை திகைக்க வைத்துள்ளது. ஒரு சிங்கம் தங்கள் மீது பாய்ந்ததை பார்த்த பயணிகளால் எப்படி அவ்வளவு அமைதியாக அமர்ந்துகொண்டு இருக்க முடிந்தது என நெட்டிசன்களால் நம்ப முடியவில்லை. 


சஃபாரி வாகனத்திற்குள் சிங்கம் குதிக்கும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோவை ட்விட்டரில் ‘Oddly Terrifying’ என்ற பயனர் பகிர்ந்துள்ளார். "புதிய வனவிலங்கு அனுபவம்" என்ற தலைப்புடன் திகிலூட்டும் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு 5.6 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.


"அனைவர் உள்ளும் கோவமும் இருக்கும், குணமும் இருக்கும். இது விலங்குகளுக்கும் பொறுந்தும்” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். “அந்த சிங்கம் பாய்ந்தவுடன் வாகனத்தில் இருந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? நினைக்கவே பயமாக உள்ளது” என ஒருவர் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


“ஓஎம்ஜி: ஓடி குதிக்கும் சிங்கம்” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். “ மனிதர்களும் விலங்குகளும் ஒன்றாக வாழ முடியும் என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு” என ஒருவர் எழுதியுள்ளார். “அன்பை காட்டிப்பாருங்கள், சிங்கமும் அடங்கிப்போகும்” என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | முதலையை விழுங்கிய ராட்ச மலைப்பாம்பு வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ