முதலையும், மலைப்பாம்பும் இருவேறு குணாதிசயங்கள் கொண்டவை என்றாலும், அவை ஒன்றையொன்று வேட்டையாடிக் கொள்கின்றன. பெரும்பாலும் முதலை, மலைப்பாம்பை வேட்டையாடுவது இயல்பாக நடக்கும். முதலைக்கு இருக்கும் குணாதிசயம் மற்றும் உடல்வாகு காரணமாக எளிதாக பாம்பை வேட்டையாடிவிடும். ஆனால், பாம்பு முதலையை வேட்டையாடுவது என்பது எப்போதாவது அரிதினும் அரிதாக நிகழும். அப்படியான சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்துள்ளது.
மேலும் படிக்க | அணகோண்டா பாம்பிடம் சரமாரியாக கடிவாங்கிய நபர்; வைரல் வீடியோ
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 5 அடி ராட்சத முதலையை, மலைப்பாம்பு விழுங்கியுள்ளது. இதனையறிந்த விலங்குகள் நல மருத்துவர்கள் மலைப்பாம்பை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, மலைப்பாம்பின் வயிற்றில் இருந்த முதலையை வெளியே எடுத்தனர். இந்த முயற்சியின்போது மலைப்பாம்பை மருத்துவர்கள் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பாம்பின் வயிற்றை இரண்டாக கிழித்து, வயிற்றுக்குள் இருந்த முதலையை வெளியே எடுத்தனர்.
பாம்பின் வயிற்றுக்குள் இருக்கும் முதலையை வெளியே எடுப்பதை முழுமையாக கேமராவில் பதிவு செய்து, மருத்துவக் குழுவினர் அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். முதலையை விழுங்கிய பாம்பின் பெயர் பர்மீஸ் மலைப்பாம்பு. உலகின் மிகப்பெரிய பாம்பு இனங்களில் ஒன்று. பொதுவாக 20 அடிக்கு மேல் இது வளரும். ஆனால் முதலையை விழுங்கிய மலைப்பாம்பு 18 அடி நீளம் கொண்டது. மருத்தவர்களால் கொல்லப்பட்ட மலைப்பாம்பு நெக்ரோஸ்கோபி மற்றும் அறிவியல் மாதிரி சேகரிப்புக்கான ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ