வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறு குழந்தைகளின் வீடியோக்களுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. குழந்தைகள் செய்யும் குறும்புகள், அவர்களின் அப்பாவித்தனம், வெகுளித்தனம் ஆகியவற்றை பார்த்து நாம் நம்மை மறந்து சிரிப்பதுண்டு. குழந்தைகள் மனதில் ஒன்று வைத்து மற்றொன்றை செய்ய மாட்டார்கள். அவர்கள் நினைப்பது அவர்களது செயலில் தெரிந்துவிடும். தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த வீடியோ ட்விட்டரில் ‘Funnyman' என்ற பக்கத்தில் பகிரப்பட்டது. வீடியோவின் துவக்கத்தில், ஒரு பெண் தனது பெண் குழந்தைக்கு முன்னால் மயங்கி விழுவது போல் நடித்து கீழே விழுகிறார். அருகில் அவரது மொபைல் போன் உள்ளது. சிறிது நேரத்தில் அவரது பெண் குழந்தை மிக மெதுவாக தன் தாயின் அருகில் வருகிறார். குனிந்து அம்மா எவ்வாறு இருக்கிறார் என பார்க்கிறார். கீழே விழுந்த தாயை பார்த்து அந்த சிறுமி வருத்தப்படுவார், அவரை எழுப்ப முயற்சிப்பார் என வீடியோவை பார்ப்பவர்கள் நினைத்துக்கொண்டிருக்க, அந்த சிறுமியோ அம்மா பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, தாயின் மொபைலை அலேக்காக தூக்கிக்கொண்டு சென்று விடுகிறார்.


மேலும் படிக்க | ‘பெண்ணே..என் ஆட்டத்த பாரு’: எருமை ஆடிய ஆட்டத்தில் ஆடிப்போன இணையவாசிகள், வைரல் வீடியோ 


நாட்டி குழந்தையின் லூட்டி வீடியோவை இங்கே காணலாம்: 



இதை கவனிக்கும் சிறுமியின் தாய்க்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வீடியோவை பார்ப்பவர்களுக்கும் இதைக் கண்டு சிரிப்பை அடக்க முடியவில்லை. 


இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


‘இந்த காலத்து குழந்தைககள்....’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘அந்த குழந்தை என்னை ஏமாற்றி விட்டது’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘குழந்தையின் அம்மா இதைதான் எதிர்பார்த்தார் போல் உள்ளது. அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை’ என மற்றொருவர் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்... இணையத்தை கலக்கும் நாய்-பூனை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ