பதற்றமான சூழலில் என்ன செய்வதென்றே சிலருக்கு தெரியாது. தான் தப்பித்து ஓடினால் போதும் என்று, இக்கட்டான நிலைமையில் ஓடிவிடுவார்கள். பொது வெளியில் ஏற்படும் சம்பவங்களின்போது இப்படி தான் அனைவரும் யோசிப்பார்கள். இது இயல்பான ஒன்று. அதுவே குடும்பத்துடன் இருக்கும்போது அப்படி யோசிக்கமாட்டார்கள். தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை முடிந்தளவுக்கு காப்பாற்ற வேண்டும் என நினைப்பார்கள். அதற்காக எத்தகைய எல்லைக்கும் போகத் தயாராக இருப்பார்கள். பெரும்பாலும் எல்லோருமே அப்படி யோசிப்பது வழக்கம். இதில் ஒன்றிரண்டு சம்பவங்கள் விதிவிலக்கு என்று கூறலாம்.
ஏனென்றால் ஆபத்தான இடத்தில் இருப்பவர்களின் மனநிலை மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து தப்பிக்க முயற்சிப்பார்கள். ஆனால், இங்கு வைரலாகியிருக்கும் வீடியோ அப்படி ஒன்றும் ஆபத்தானதாக இருக்கவில்லை. ஆனால், கணவன் தானும் குழந்தையும் தப்பித்தால் போதும் என்றும தலைதெறிக்க மனைவியை விட்டு ஓடுவது காண்போருக்கு நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஓடியிருந்தால் மட்டும் பரவாயில்லை, ஆபத்தில் இருக்கும் மனைவி தப்பித்துவிடதாபடி, சமையலறையின் கதவை அவசரத்தில் லாக் செய்துவிட்டு ஓடுகிறார். இதுதான் வீடியோவின் ஹைலைட் என்றே கூறலாம்.
மேலும் படிக்க | பாவம்! நடுரோட்டில் முன்னாள் காதலியுடன் காதல் செய்த செயல்: வீடியோ வைரல்
அந்த வீடியோவில் மனைவி சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பின்னால் கணவன் இருக்கிறார். குழந்தை பிரிட்ஜ் அருகே நின்று கொண்டிருக்கிறது. அப்போது, மனைவி சமைத்துக் கொண்டிருக்கும்போது கடாயில் தீப்பிடித்து மிகப்பெரிய உயரத்துக்கு எழும்புகிறது. தீ உயர எழுவதை பார்த்தவுடன் அதிர்ச்சியடையும் கணவன், நொடிப்பொழுதில் அங்கிருந்து வேகமாக ஓடி வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு சமையலறையில் இருந்து வெளியே வருகிறார்.
He’s dead pic.twitter.com/q1qJgUrsrQ
—(@Extremelol_) October 2, 2022
அவர் வேகமாக வந்திருந்தால் மட்டும் பரவாயில்லை, கூடவே சமையலறையின் கதவையும் லாக் செய்துவிட்டு வருகிறார். இதனைப் பார்க்கும் மனைவிக்கு கடும் கோபம் வந்துவிடுகிறது. வேகமாக காலணியை கழற்றிக் கொண்டு கணவனை நோக்கி ஆவேசமாக செல்லும்போது வீடியோ முடிவடைந்துவிடுகிறது. காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இந்த வீடியோ, டிவிட்டரில் மட்டும் 14.2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | பிரதர்னு கூப்புடாதிங்க - மனசே வலிக்குது; நஸ்ரியாக்களை எச்சரிக்கும் ஊபர் ஓட்டுநர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata