நியூயார்க் நகர கடற்கரைகளில் சுறாமீன்களை காண்பது சாதாரணமான ஒன்று, இங்குள்ள கடல்களில் சுறாமீன்கள் அதிகமான அளவில் துள்ளி குதித்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கும்.  வேகமாக நீந்தக்கூடிய மற்றும் அளவில் பெரியதாக இருக்கும் சுறாக்களை கண்டாலே பலருக்கும் பயம், பல திரைப்படங்களில் சுறாமீன்கள் மனிதர்களை கொலை செய்வதை பற்றி பார்த்திருப்போம், இதனாலேயே பலருக்கும் சுறாமீன்கள் மீது அதிக பயம்.  ஆனால் சுறாக்களோடு பழக்கப்பட்டவர்களுக்கு சாதாரண ஒன்றுதான், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு நபர் எவ்வித பாதுகாப்பு உபகரணமுமின்றி சுறாவை வெறும் கைகளால் பிடித்து இழுத்து கரையில் போடும் காட்சி பார்ப்பவர்களை திகிலடைய செய்துள்ளது.   சிலருக்கு இந்த வீடியோ பார்க்கும்போது பயமாகவும், சிலருக்கு இதனை பார்க்கும்பொழுது ஆர்வமாகவும் திகிலாகவும் இருக்கின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூயார்க்கில் உள்ள ஸ்மித் பாயிண்ட் கடற்கரையில் பலர் கூடியிருக்கின்றனர், அப்போது ஒருவர் கடலில் தூண்டிலை போட்டு மீன்களை பிடிக்க முயல்கிறார்.  அந்த கடலில் அதிகளவில் சுறாமீன்கள் சுற்றித்திரியும் என்பதால் அவர் போட்ட தூண்டிலில் பெரிய சுறாமீன் ஒன்று மாட்டிக்கொள்கிறது.  அந்த சுறாமீனை வெளியே எடுக்க முயல்கிறார், வேகமாக பிடித்து இழுத்து கடற்கரைக்கு கொண்டு வருகிறார்.  கடலில் அடித்த அலையில் அந்த சுறா வேகமாக முயன்று கடலுக்குள் சென்று விடுகிறது.  மீண்டும் அந்த நபர் சுறாவை வெளியே இழுக்க முயற்சி செய்கிறார், இந்த முறை அவர் சுறாமீனை கடற்கரையில் எடுத்து வந்துவிட்டார், அது தப்பித்து ஓடாமல் இருக்க அதன் வாலை இறுக்கமாக பிடித்துகொள்கிறார்.  அந்த சூறாமீன் கடலுக்குள் செல்ல எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த நபர் அதனை விடவில்லை.  இறுதியாக அந்த நபர் சுறாமீனை கடலுக்குள் விட்டுவிடுகிறார்.


 



மேலும் படிக்க | டேய் நீ போடா..! நாடோடிகள் பட பாணியில் எட்டி பார்க்கும் பூனைக்குட்டிகள்!


இந்த வீடியோவானது ஒன்லி-இன்-மேஸ்டிக் என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  இந்த வீடியோவிற்கு இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது.  இந்த வீடியோவை பார்த்த ஒருவர், அவை மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தியுள்ளன, அவற்றின் இனப்பெருக்க காலத்தில் அதனை ஏன் தொந்தரவு செய்யவேண்டும் என்பது போன்று கமெண்ட் செய்துள்ளார் மற்றொருவர், மற்ற மீன்களை பிடிக்க முயலும்போது தவறுதலாக சுறா பிடிபட்டுவிட்டது, பின்னர் இது மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க | சரக்கடித்த குரங்கு செய்யும் லூட்டி: குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ