Viral News: குப்பையில் கிடைத்த அப்பாவின் பழைய பாஸ்புக்: ஒரே இரவில் கோடீஸ்வரரான நபர்
Viral News: தேவையற்றதாக கருதப்பட்ட ஒரு பழைய கால குப்பைக்கூளம் ஒருவரை ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது. சிலி நாட்டை சேர்ந்த எக்ஸிகுயல் ஹினோஜோசா என்பவர்தான் அந்த அதிர்ஷ்டசாலி.
வைரல் நியூஸ்: பணம் பத்தும் செய்யும்... பணம் பாதாளம் வரை பாயும்... அதே பணம் நம்மிடம் எப்போது வேண்டுமானாலும் வரும்.. எப்படி வேண்டுமானாலும் விட்டுச்செல்லும்!! சிலர் மீது திடீரென அது மழையாய் பொழியும், சிலரிடம் மெதுவாகத்தான் வந்து சேரும். எப்படியும் அதற்கான எதிர்பார்ப்பு அனைவருக்கும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.
ஒரே இரவில் நீங்கள் கோடீஸ்வரரானால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!! கற்பனையே மிக இனிமையாக இருக்கும். ஆனால் இது ஒருவருக்கு நிஜமாகி இருக்கின்றது. தேவையற்றதாக கருதப்பட்ட ஒரு பழைய கால குப்பைக்கூளம் ஒருவரை ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது. சிலி நாட்டை சேர்ந்த எக்ஸிகுயல் ஹினோஜோசா என்பவர்தான் அந்த அதிர்ஷ்டசாலி. வெறும் தட்டுமுட்டு பழங்கால சாமான்களாக கருதப்பட்ட பொருட்களுக்கு மத்தியில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள புதையலை அவர் கண்டுபிடித்தார். அதன் பிறகு அவர் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், இந்த புதையல் வைரங்களைப் போல பிரகாசிக்கும் பொருள் எல்லாம் இல்லை. அவர் கண்டெடுத்த பொக்கிஷம் அவனது தந்தையின் ஆறரை தசாப்தங்கள் பழமையான வங்கி பாஸ்புக்!! ஆம், அதில்தான் அவருக்கான அதிர்ஷ்டம் ஒளிந்திருந்தது.
வீட்டைச் சுத்தம் செய்யும் போது எக்ஸீகுயெல் பல வித பழைய காகிதங்கள் மற்றும் பழைய புத்தகங்களை குப்பை பையில் போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது சாதாரண ஒரு குப்பை புத்தகமாக தோற்றமளித்த ஒன்றை அவர் கவனித்தார். ஆனால், அவருக்கு ஏதோ தோன்ற அவர் அதை கூர்ந்து கவனித்தார். அப்போதுதான் இது சாதாரண குப்பை இல்லை என்பதை அவர் உணர்ந்தார். அது நீண்ட காலமாக யார் கண்ணிலும் அகப்படாமல் தொலைந்து போயிருந்த வங்கி பாஸ்புக்!! இது கடந்த காலத்தின் ஒரு சான்றாக அவர் முன் வந்தது. இந்த வங்கிக் கணக்கைப் பற்றி அவரது தந்தைக்கு மட்டுமே தெரிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அவரது தந்தை இறந்து போனார். அதன் பின் அந்த வங்கிக்கணக்கு விவரம் யாருக்கும் தெரியாமலேயே போனது.
1960-70 களில், எக்ஸீகுயலின் தந்தை எதிர்காலத்தில் வீடு வாங்குவதைக் கருத்தில் கொண்டு சுமார் 1.40 லட்சம் சிலி பெசோக்களை வக்கியில் டெபாசிட் செய்தார். அந்தத் தொகை இன்றைய டாலர்களில் தோராயமாக $163, இந்திய ரூபாயில் சுமார் 13,480 ஆகும்.
எனினும், பாஸ்புக்குடன் தொடர்புடைய வங்கி நீண்ட காலம் முன்னரே மூடி விட்டது என்பதை அறிந்த பின்னர் எக்ஸீகுயலின் திடீர் மகிழ்ச்சி தொலைந்துபோனது. மேலும், இன்னும் பலர் அதே நிறுவனத்திடமிருந்து இதே போன்ற பாஸ்புக்குகளை வைத்திருந்தனர் என்பதும், அந்த தொகையை மீட்டெடுப்பதற்கான நம்பிக்கையை மங்கச் செய்தது. ஆயினும்கூட, பாஸ்புக்கில் பொறிக்கப்பட்ட ஒரு முக்கியமான விவரத்திலிருந்து நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் மீண்டும் ஒளி வீசியது. “ஸ்டேட் கேரண்டீட்” என்ற சொற்றொடர் அதில் பொறிக்கப்பட்டு இருந்தது. வங்கி பணத்தை கொடுக்க தவறினால், பணத்தை திருப்பிச் செலுத்துவதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதுதான் அந்த சொற்றொடரின் பொருள்.
இந்த உத்தரவாதம் இருந்தபோதிலும், தற்போதைய அரசாங்கம் அதை மதிக்க மறுத்து. எக்ஸீகுயலை சட்டப் போரில் தள்ளியது. அவர் தனது வழக்கை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார். இந்த நிதி தனது தந்தையின் கடின உழைப்பால் சம்பாதித்த சேமிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று உணர்ச்சியுடன் வாதிட்டார். கவனமாக பரிசீலித்த பிறகு, நீதிமன்றம் எக்ஸீகுயலுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. எக்ஸீகுயலின் தந்தை டெபாசிட் செய்திருந்த தொகைக்கு ஈடாக, அந்த தொகையின் வட்டி மற்றும் கொடுப்பனவுகளையும் சேர்த்து 1 பில்லியன் சிலி பெசோக்கள், (அதாவது சுமார் 1.2 மில்லியன் டாலர்கள், சுமார் 10 கோடி இந்திய ரூபாய்) எக்ஸீகுயலுக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது.
கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்த அரசாங்கம் உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கை கொண்டு சென்றுள்ளது. இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. எனினும், எக்ஸீகுயலின் இந்த பயணம் ஒரு முக்கிய பாடத்தை புகட்டுகிறது. ‘எதையுமே தேவையற்ற பொருள் என ஒதுக்கிவிட முடியாது... எங்கு நமக்கான அதிர்ஷ்டம் நமக்காக காத்துக்கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரியாது!!” எக்ஸீகுயலின் இந்த கதை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.
மேலும் படிக்க | நடுரோட்ல இப்படியுமா பண்ணுவ! வெட்கத்தில் தலை குனியும் இளம்பெண் வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ