செம கூல்.. செம மாஸ்.. இணையத்தில் புயலை கிளப்பிய ஆட்டம்: மயங்கிய நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Funny Dance Video: ஒரு சிறுமி தன்னுடைய அற்புதமான நடனத்தால் அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 8, 2023, 10:48 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் amrita_binita_chetryandtriangle_of_dance என்ற பக்கத்தில் பகிரப்படுள்ளது.
  • இதற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூஸும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
செம கூல்.. செம மாஸ்.. இணையத்தில் புயலை கிளப்பிய ஆட்டம்: மயங்கிய நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.

இணையத்தில் குழந்தைகளின் வீடியோகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூக உடகங்களின் மூலம் குழந்தைகள் தங்கள் பல வித திறமைகளை உலகுக்கு காட்டுகிறார்கள். இந்த சிறுவன் சிறுமியர்களின் கலைத் திறமைகளும் பிற திறமைகளும் பல சமயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. குழந்தைகள் எந்த வித கபடும் சூதும் இல்லாத நல்ல உள்ளங்களை கொண்டவர்கள். இவர்கள் ஒரு வேலையை செய்யும் முன் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. மனம் எதை நினைக்கிறதோ அதை செய்து முடிக்கிறார்கள். 

இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்கும் மற்றொரு வீடியோ வகை நடன வீடியோக்கள் ஆகும். இந்த வீடியோக்கள் மூலம் பலரது நடன திறமைகள் உலகின் பார்வைக்கு வந்துள்ளது. பலருக்கு இப்படிப்பட்ட வீடியோக்கள் மூலம் உலக அரங்கில் அறிமுகமும் அங்கீகாரமும் கூட கிடைத்துள்ளது. திருமணங்கள், பல்வேறு விழாக்கள், பள்ளிகள், தெருக்கள் என பல இடங்களில் பலர் ஆடும் நடனத்தை நாம் இந்த வீடியோக்களில் பார்த்துள்ளோம். பல வருடங்களாக மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு வழியாக நடனம் இருந்து வந்துள்ளது. ஒரு நல்ல நடனத்தை ரசிக்காத எவரும் இருக்க முடியாது.

அப்படிப்பட்ட ஒரு அபாரமான நடனத்தை காட்டும் ஒரு வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளிவந்துள்ளது. ஒரு சிறுமி தன்னுடைய அற்புதமான நடனத்தால் அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | நடுரோட்ல இப்படியுமா பண்ணுவ! வெட்கத்தில் தலை குனியும் இளம்பெண் வீடியோ வைரல்

தனது நடனத்தால் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய சிறுமி

இந்த நடனத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு சிறுமியை காண முடிகின்றது. அவர் பஞ்சாபி பாடல்களில் ஹிப்-ஹாப் மற்றும் ஃப்ரீஸ்டைல் ​​நடனம் ஆடுகிறார். மக்கள் அவரைப் பார்த்து திகைக்கும் வகையில் அவரது டான்ஸ் ஸ்டெப்ஸ்கள் உள்ளன. இந்த சிறுமி தனது நடனத்தின் மூலம் அங்குள்ள மக்களின் மனதை வெல்கிறார். இதுமட்டுமின்றி இந்த வீடியோவை பார்க்கும் இணையவாசிகளின் மனதையும் அவர் வென்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். சிறுமியின் இந்த நடன வீடியோவை மக்கள் விரும்பி சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

சிறுமியின் மாஸான நடனத்தை இந்த வீடியோவில் காணலாம்:

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் amrita_binita_chetryandtriangle_of_dance என்ற பக்கத்தில் பகிரப்படுள்ளது. செய்தி எழுதும் நேரம் வரை, இதற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூஸும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

‘என்ன அற்புதமான நடனம்’ என ஒரு பயனர் பாராட்டியுள்ளார். ‘உண்மையில் இந்த வீடியோ எங்களை நடனமாட கட்டாயப்படுத்தியுள்ளது.’ என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | காப்பாத்துங்க.. பொண்டாட்டி படுத்தறா: ஏர் ஹோஸ்டசை உதவிக்கு அழைத்த கணவன், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News