நடுரோட்ல இப்படியுமா பண்ணுவ! வெட்கத்தில் தலை குனியும் இளம்பெண் வீடியோ வைரல்

Dog Trending Video: நாய்க்குட்டிகளின் சேட்டைகள் ரசிக்கக் கூடியவை. ஆனால், செல்லங்களால் தர்மசங்கடமும் ஏற்படும் என்பதைக் காட்டும் வீடியோ இது. செல்லத்தை நொந்து கொள்ளும் அழகி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 12, 2023, 05:57 PM IST
  • இளம்பெண்ணை இப்படி பப்ளிக்கா நனைய வைக்கலாமா?
  • நாயுடன் மல்லுக்கட்டும் இளம்பெண் வீடியோ வைரல்
  • ஆச்சரியத்துடன் இளம்பெண்ணை வெறித்து பார்க்கும் மக்கள்
நடுரோட்ல இப்படியுமா பண்ணுவ! வெட்கத்தில் தலை குனியும் இளம்பெண் வீடியோ வைரல் title=

சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அதிலும், விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் உள்ள ரசிகர் பட்டாளம், ஒரு வீடியோவையும் விட்டு வைப்பதில்லை என்று சொல்லும் அளவுக்கு வைரல் வீடியோக்களில் லைக்குகள் வந்து குவிகின்றன. அதிலும் செல்ல பிராணிகளின் சேட்டை என்றால் கேட்கவே வேண்டாம்.

நமது மன அழுத்தத்தையும் டென்ஷனையும் போக்கும் சுவாரசியமான வீடியோக்களை சமூக ஊடகங்களில் பார்த்து, ரசித்து லைக் போட்டு என்பது ஒரு வேலையாகவே மாறிவிட்டது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை என சாதாரணமான வீட்டு விலங்குகளின் வீடியோக்கள் முதல், காட்டு விலங்குகளின் சில்லறை காமெடி வரை விலங்குகளின் வீடியோக்கள் வைரலாகின்றன.

நாய்க்குட்டிகளின் சேட்டைகள் ரசிக்கக் கூடியவை.  அதில் இன்று வெளியாகி சக்கைப்போடு போடும் வீடியோவில், நாய்க்குட்டியை அழைத்து போன பெண்ணின் தர்மசங்கட வீடியோ இது. ஏன் வெளியே கூட்டிப்போனேனோ என அந்த அழகியை நொந்து கொள்ள வைத்த சம்பவம் இது

வைரலாகும் நாய்க் குட்டி வீடியோ: 

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த அழகிய வீடியோவை இதுவரை பல லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருக்கின்றனர். Buitengebieden @buitengebieden என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோவிற்கு லைக்குகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளன. இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

மேலும் படிக்க | கொள்ளை அழகு ... மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் முயல் - நாய் குட்டி வீடியோ!

சமீபத்தில் சில நாட்களுக்கு முன் வைரலான ஒரு வீடியோவில், நாய்க்குட்டி மற்றும் பூனைக்குட்டிக்கு இடையிலான நட்பை வெளிப்படுத்தியது. இப்படிப்பட்ட செல்லங்களின் வீடியோவில் அவற்றின் ஆசையை காட்டும் வீடியோக்களும், குறும்பை, குரோதத்தை காட்டும் வீடியோக்களையும் பார்க்கிறோம். 

சமூக ஊடகத்தில் பகிரப்படும் சில வேடிக்கையான, அரிய தருணங்களை காட்டும் வீடியோக்கள் நம் மனதை மிகவும் லேசாக்கி விடும். இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள், சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.

ஆனால், சில வீடியோக்கள் சோகத்தையும் கொண்டு வந்து சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அவற்றின் டாப் 10 பட்டியலில் நாய்க்குட்டிகளின் குறும்பு வீடியோக்களே முதலிடத்தை பிடிக்கின்றன.

மேலும் படிக்க | Viral Video: வாஞ்சையான அந்த ஸ்பரிசம்... சான்ஸே இல்ல... இணையத்தை கலக்கும் வீடியோ!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் உறுதி செய்யவோ, பரிந்துரைக்கவோ இல்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News