விசித்திரமான விபத்தின் வைரல் வீடியோ: சிரிக்காம இருக்க முடியாது
Funny Viral Video: இது ஒரு விபத்தின் வீடியோ என்றாலும் இதில் நடந்தது பார்ப்பவர்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும். இந்த வேடிக்கையான வீடியோ லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கான மக்கள் இதை லைக் செய்துள்ளனர்.
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வேடிக்கை மற்றும் கேளிக்கைக்கான வீடியோக்கள் இணையத்தில் மிக அதிகமாக பார்க்கப்படுகின்றன. சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டு நீண்ட நாட்களுக்கு வைரலாக இருக்கின்றன. இதுபோன்ற ஒரு வீடியோ இப்போது வெளிவந்துள்ளது. அதைப் பார்த்தால் சிரிப்பதா, நிம்மதியடைவதா என தெரியவில்லை.
மேலும் படிக்க | பசுவுக்கு அடித்த ஷாக், பாய்ந்துவந்து காப்பாற்றிய நிஜ ஹீரோ: வீடியோ வைரல்
இது ஒரு விபத்தின் வீடியோ என்றாலும் இதில் நடந்தது பார்ப்பவர்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும். இந்த வேடிக்கையான வீடியோ லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கான மக்கள் இதை லைக் செய்துள்ளனர்.
பறந்து போய் காரின் மேல் அமர்ந்த நபர்
சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில், டிராஃபிக் சிக்னலில் ஒரு கார் நிற்பதைக் காண முடிகின்றது. அப்போது அதிவேகமான பைக் ஒன்று சிக்னல் அருகில் வருகிறது. பைக்கின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், பைக் ஓட்டிய நபரால் அதை சட்டென கட்டுப்படுத்த முடியவில்லை.
வீடியோவில் இதற்குப் பிறகு நடந்தது மிகவும் வேடிக்கையான விஷயம். சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பைக் நேரடியாக மோதியது. இந்த விபத்தில் அந்த நபருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம். காரில் மோதியவுடன் அந்த நபர் பறந்து சென்று நேராக காரின் மேல் அமர்வதை வீடியோவில் காண முடிகின்றது. இந்தக் காட்சி காண்பவர்களை அதிர வைக்கிறது.
விசித்திரமான விபத்தின் வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியொ சில காலமாக சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. இது @NitinArchitect என்ற அகவுண்டில் ட்விட்டரிலும் பதிவேற்றப்பட்டுள்ளது. வேடிக்கையான விபத்தின் இந்த வீடியோ இதுவரை லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நெட்டிசன்கள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
மேலும் படிக்க | Monkey Viral Video: படுக்கையில் குரங்கின் உல்லாச செயல்; வைரலாகும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR