வாக்கிங் செல்லாமல் ஸ்கேட்டிங் சென்று டபாய்க்கும் தாத்தா: வீடியோ வைரல்

Age is just a number: நடைபயிற்சி முக்கியமா தூரத்தை கடப்பது முக்கியமா என்று குறும்பு செய்யும் தாத்தாவின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 4, 2022, 07:40 PM IST
  • Age is just a number: நடைபயிற்சி முக்கியமா தூரத்தை கடப்பது முக்கியமா என்று குறும்பு செய்யும் தாத்தாவின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது
வாக்கிங் செல்லாமல் ஸ்கேட்டிங் சென்று டபாய்க்கும் தாத்தா: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: உடற்பயிற்சி செய்வது அனைவருக்கும் நல்லது. அதிலும் முதியவர்களுக்கு உடல் உழைப்பு குறைந்துவிடுவதால், அவர்கள் கட்டாயம் உடல் ஆரோக்கியத்தைப் பேண உடற்பயிற்சி செய்வது அவசியம்.

ஆரோக்கியத்தை பாதுகாக்க மட்டுமல்ல, உடலின் உறுப்புகளை இயல்பாக இயங்க வைக்கவும் உடற்பயிற்சி அவசியமாகிறது. வயதானவர்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், நடைபயிற்சி செய்வது அவசியம். இது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

உடல் நீதியான உழைப்பு இல்லாதவர்களும், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள விரும்புபவர்களும் உடற்பயிற்சி வாக்கிங் என பல வழிகளில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முயற்சிக்கின்றனர். அதேபோல இன்று செல்லப்பிராணிகளை வீடுகளில் வளர்ப்பதும் அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க | யாரு பெருசுனு அடுச்சு காட்டு..மாறி மாறி சண்டையிடும் பூனைகளின் வைரல் வீடியோ!

இணையத்தில் செல்லப்பிராணிகள் தொடர்பாக காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

செல்லப்பிராணி என்றால் அதில் முதலிடத்தில் வருவது நாய்கள் தான். நாய்களின் நன்றியுணர்ச்சியும் பாசமுமே அவற்றை மனிதர்களுக்கு நெருக்கமாக்குகின்றன. வாக்கிங் செல்லும்போதும், எங்கு சென்றாலும் குடும்ப உறுப்பினரைப் போல செல்லப்பிராணியை அழைத்துச் செல்வது சகஜமாக இருக்கிறது.

பல வித வினோத வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரல் ஆனாலும், செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் எப்போதுமே வரவேற்பைப் பெறுகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இந்த வீடியோவில் முதியவர் தனது நாயுடன் வாக்கிங் செல்கிறார். உண்மையில் இது வாக்கிங் தானா? நீங்களே சொல்லுங்கள்...

வாக்கிங் செல்லும் முதியவரின் ஒரு கையில் கைத்தடியும் மற்றொரு கையில் நாயும் இருக்கின்றன. ஸ்கேட்டிங்கில் ஏறி அவர் ஸ்கேட்டிங் செய்ய, நாய் அவருக்கு இணையாக வாக்கிங் செல்கிறது. உண்மையில் வயதானால் தசைகள் நன்றாக இயங்க வேண்டும் என்பதற்காக நடைபயிற்சி செய்வதற்காக வந்த தாத்தா, நாயை வாக்கிங் செய்ய வைக்கிறார்.

ஜாலியாக, கால் நோகாமல் தாத்தா ஸ்கேட்டிங் செய்வது அவர் வீட்டில் உள்ளவர்களுக்கோ, இல்லை மருத்துவருக்கோ தெரியுமா? தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் தாத்தா ஜாலியாக ஸ்கேட்டிங் செய்கிறார். நாய்க்குட்டியும் அழகாக வாக்கிங் செல்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதுபோன்ற குட்டியான சுட்டித்தனம் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பலரின் மனதையும் கவர்கின்றன. Age is just a number என்ற தலைப்புடன் இந்த வீடியோவை @buitengebieden என்ற டிவிட்டர் கணக்கு பகிர்ந்துள்ளது. 

மேலும் படிக்க | நோ பிராப்ளம் வயசாச்சுன்னா மறதி வர்றது சகஜம்தான்: நாய்க்குட்டி வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News