வைரல் வீடியோ: பல்வேறு வகையான உணவுப் பொருட்களின் புகைப்படங்கள் அல்லது அவற்றின் சமையல் குறிப்புகளின் வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நமது இந்திய உணவுகள், அதுவும் காரசாரமான உணவுகளின் பேச்சு வந்தாலே அனைவருக்கும் அதை உடனே சாப்பிட வேண்டும் என்ற ஆசை பிறக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம்மில் சிலர் உணவுப்பிரியர்களாக இருக்கிறோம். அனைத்து வித உணவுகளும் நமக்கு பிடித்தாலும், நம்மால் ஆசையை அடக்கவே முடியாத சில உணவுகளும் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணவுப் பண்டம் அவர்களது ஃபேவரட் உணவாக இருக்கும்.


அற்புதமான சமோசா


சமோசா பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோவில், நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு பெரிய அளவிலான சமோசாவை காண முடிகிறது. இந்த சமோசாவுடன், சிவப்பு இனிப்பு சட்னி மற்றும் பச்சை புளிப்பு சட்னி ஆகியவை இரண்டு பெரிய கிண்ணங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வைரல் வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.


மேலும் படிக்க | என்ன அடிச்சிட்டு நீ அழுகுறியே...குழந்தையை பார்த்து குழம்பிய பூனை! 


ராட்சத சமோசாவின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 



சமோசாவை கட் செய்த பெண் 


இந்த வீடியோவில் உள்ள பெண் சமோசாவை சாப்பிட, ஒரு பெரிய கத்தியால் சமோசாவை வெட்டத் தொடங்கினார். அந்த பெண்ணின் முகத்தில் இருந்த புன்னகை, அவர் சமோசாவை சாப்பிட எவ்வளவு ஆசையாய் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. 


அந்தப் பெண் சமோசாவில் ஒரு பெரிய பகுதியை வெட்டி கேமராவுக்கு முன்னால் காட்டுகிறார். அந்த ஒரு துண்டே சாதாரண சமோசாவை விட பெரிதாக உள்ளது. இதைப் பார்த்தவர்களால் தங்கள் கண்கணையே நம்ப முடியவில்லை. இந்த வீடியோவுக்கு பலரும் தங்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


வைரலான வீடியோ


இந்த பெண் ஒரு உணவு பதிவர் (ஃபுட் ப்லாகர்). இவர் இதுபோன்ற வித்தியாசமான உணவுப் பொருட்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார். இந்த வீடியோவை இதுவரை 20 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதுமட்டுமின்றி இந்த வீடியோவை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.


மேலும் படிக்க | தன்னை முயலென நினைத்துக்கொண்டு கியூட்டா குதிக்கும் நாய்க்குட்டி: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR