உடல் எடையை குறைக்க சாப்பாட்டின் அளவை குறைக்கலாமா?

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சாப்பாட்டின் அளவை குறைக்கும்போது உடலுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடும்.  

Written by - RK Spark | Last Updated : May 28, 2022, 09:17 PM IST
  • உடல் எடை குறைப்பு விஷயத்தில் குறைவான அளவு உணவை உண்ணுவது தவறான விஷயமாகும்.
  • உணவில் ஊட்டச்சத்தை சரியான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • சாப்பிடக்கூடிய உணவில் புரோட்டீன், நல்ல கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருக்க வேண்டும்.
உடல் எடையை குறைக்க சாப்பாட்டின் அளவை குறைக்கலாமா? title=

நாம் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தான் விரும்புகிறோம், இந்த பரபரப்பான சூழல் நாம் சில அழுத்தங்கள் காரணமாக ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்து விடுகிறோம்.  இதனால் பலருக்கும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.  உடல் எடை குறைப்பு விஷயத்தில் குறைவான அளவு உணவை உண்ணுவது தவறான விஷயமாகும், இதனால் உடலுக்கு போதியளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படுகிறது.  ஊட்டச்சத்துகள் உடலுக்கு நன்மை அளிக்ககூடியவை, அதனால் உணவில் இவற்றை சரியான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | வாழைப்பழம் அதிகம் சாப்பிடுகிறீர்களா?... கவனம் தேவை

கார்போஹைட்ரேட், புரோட்டின் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியவை, இவற்றை உணவில் தவிர்ப்பது தீங்கானது.  உணவின் அளவை குறைவாக சாப்பிட்டால் உடல் எடை குறைந்துவிடும் என்று பலரும் நினைக்கலாம், ஆனால் அது உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை அளிக்காமல் உடலை வலிமையற்றதாக மாற்றிவிடுகிறது.  அதேபோல நம்முடைய மண்வளம், காலநிலை போன்றவற்றை அடிப்படையாக வைத்து நமது பகுதியில் வளரும் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  8 மணி நேர இடைவேளைக்கு பிறகு உண்ணுவது உடலை சீரமைக்கவும், உடலின் செயல்பாடுகளை சீராக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.  

health

அவ்வாறு நீங்கள் சாப்பிடக்கூடிய உணவில் காய்கறிகள், புரோட்டீன், நல்ல கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருக்க வேண்டும்.  இது உங்கள் உடலுக்கு போதிய அளவிலான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.  உடை எடையை சமன்செய்ய குறுக்கு வழியில் நீங்கள் கடைபிடிக்கும் டயட் முறைகள் ஆரம்பத்தில் எதிர்பார்த்த பலனை கொடுத்தாலும், இறுதியில் அது பாதிப்பையே ஏற்படுத்தும்.  முறையற்ற டயட் மேற்கொள்ளுவதால் வாயு பிரச்சனை,முதி உதிர்தல், சரும பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.  பல சூப்பர் மார்க்கெட்டுகளில் டயட் மேற்கொள்ள தேவையான உணவு பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.  அவற்றை நாம் வாங்கி பயன்படுத்துவதற்கு முன்னர் அதில் என்னென்ன ஊட்டச்சத்து பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன, பொருட்களின் தயாரிப்பு, ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்று அனைத்தையும் கவனமாக படித்து பார்த்த பின்னரே அதனை வாங்கி சாப்பிட வேண்டும்.

மேலும் படிக்க | Jaggery: வளர்சிதை மாற்றத்தை தூண்டி உடல் எடையை குறைக்கும் வெல்லம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News