வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளின் வீடியோக்களை இனையவாசிகள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். அதுவும் குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். சமூக ஊடகங்களில் குரங்குகள் செய்யும் பல அட்டகாசங்களின் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. குரங்குகளின் மனநிலையை கணிப்பது கடினம். ஒரு சமயம் அமைதியாக இருக்கும் இவை அடுத்த கணமே அட்டகாசம் செய்யத் துவங்கிவிடும். அதனால்தான் அடிக்கடி தன் கருத்தை மாறி மாறி கூறுபவர்களை குரங்கு புத்தி என குறிப்பிடுகிறார்கள். 


சமூக வலைதளங்களில் தினமும் குரங்குகளின் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. மதுபோதையில் கண்டதை செய்யும் மனிதர்களின் வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், குடிப்போதையில் கும்மாளம் அடிக்கும் குரங்கின் வீடியோக்களை பார்த்ததுண்டா? அபப்டி ஒரு வீடியோ சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. மதுபோதையில் இருக்கும் குரங்கின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


குடிகார குரங்கு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரெண்டாகி வருகிறது. இந்த குடிகார குரங்கின் வீடியோ உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள கட்டம்பூரில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த குரங்குக்கு வாழைப்பழமோ பிற உணவுகளோ தேவை இல்லையாம். கையில் ஒரு மதுபாட்டிலை கொடுத்து விட்டால், அது தன் பாட்டிற்கு நிம்மதியாய், சந்தொஷமாய் இருக்குமாம்.  இந்த வீடியோவில் இருக்கும் குரங்கு கிளாசில் இருக்கும் மதுபானத்தை குடிப்பதை பார்த்தால், அதற்கு இதில் அதிக அனுபவம் இருப்பது போல தெரிகிறது. ஜூஸ் குடிப்பது போல அது மிக லாவகமாக மதுவை குடிக்கிறது. 


மேலும் படிக்க | அன்புள்ள சென்னை மேயருக்கு! விஷால் எழுதிய மிக்ஜாங் புயல் பிரச்சனை வீடியோ வைரல்


சரக்கடித்த குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் -இல் @liveankitknp என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். சிலர் இதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டாலும், சிலர் இதற்கு கடுமையான விமர்சனங்களையும் அளித்து வருகின்றனர். ‘போதைப்பழக்கம், குடிப்பழக்கம்...இவை எல்லாம் குரங்குகளையும் விட்டு வைக்கவில்லையா’ என ஒருவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ‘மனிதர்கள் இதையும் குரங்குகளுக்கு கற்றுக்கொடுத்து விட்டார்கள்’ என ஒரு பயனர் தனது கோவத்தை வெளிப்படுத்தியுள்ளார். 


விலங்குகளை கொடுமைப்படுத்துவதிலும் கிண்டல் செய்வதிலும் மக்கள் கிடைத்த வாய்ப்பை விடுவதில்லை. குரங்குக்கு மக்கள் மது அளித்து அதன் பிறகு குரங்கு செய்யும் சேட்டைகளை பார்த்து ரசிக்கும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த பழக்கம் குரங்குகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம். இது மட்டுமின்றி மதுபோதையில் குரங்குகள் ஆக்ரோஷமாக நடந்துகொண்டால் அது அங்கிருக்கும் மனிதர்களயும் பாதிக்கலாம். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | Viral Video: காயின் மேஜிக்கில் அசத்தும் கில்லாடி பூனைக்குட்டி... வியக்கும் நெட்டிசன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ