வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். விலங்குகளின் உலகில் நாம் அருகில் சென்று பார்க்க முடியாத பல விஷயங்களை இந்த வைரல் வீடியோக்கள் மூலம் நாம் காண்கிறோம். சிங்கம், புலி, குரங்கு, நாய், பூனை ஆகியவை இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். இவற்றின் வீடியோக்கள் பதிவேற்றப்பட்ட உடனே வைரலாகி விடுகின்றன.


குரங்குகளின் வீடியோக்களுக்கு இருக்கும் கிரேசுக்கும் பஞ்சமில்லை. குரங்குகள் செய்யும் கோமாளித்தனமான செயல்கள் மக்களை ஈர்க்கின்றன. சமீபத்திலும் குரங்கின் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. ஆனால் இந்த வீடியோவில் குரங்கு செய்யும் செயல் சற்று ஆபத்தானதாக உள்ளது.


வைரல் ஆகி வரும் குரங்கு வீடியோவை இங்கே காணலாம்: