இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள் மற்றும் பறவைகளும் தங்கள் பொருட்களைப் பாதுகாப்பதில் வல்லுநர்கள். பச்சிளம் குழந்தையை ஒரு தாய் எத்தனை பாதுகாப்பாக பார்த்துக்கொள்கிறாரோ, அதே அக்கறையுடன் விலங்குகளும் பறவைகளும் தாங்கள் இடும் முட்டைகளையும், தங்கள் குட்டிகளையும் பாதுகாக்கின்றன. விலங்குகள் மற்றும் பறவைகளின் தாய் பாசத்தை எடுத்துக்காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.


அப்படி ஒரு வீடியோ தற்போதும் வைரல் ஆகி வருகின்றது. முட்டையை திருட வந்தவர்களுக்கு  பெண் மயில் பாடம் கற்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் பெண்ணுக்கு முட்டை திருட உதவி செய்யும் ஆண் ஒருவரும் அவருடன் காணப்படுகிறார். பெண் மயிலின் இந்த வீடியோ அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் இதற்கு இணைய பயனர்கள் அதிக கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 


முட்டையை திருடியதற்காக மயில் அளித்த தண்டனை 


வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒருவர் மரத்தின் மீது ஏறுவதை காண முடிகின்றது. ஒரு பெண் கீழே நிற்கிறார். அந்த நபர் மயிலின் முட்டையை திருடி கீழே நின்றிருந்த பெண்ணிடம் கொடுக்கிறார். அவர் தொடர்ந்து இப்படி செய்கிறார். அப்போது திடீரென பெண் முயலில் பார்வை இருவர் மீதும் படுகின்றது. அந்த மயில் முட்டைகளை எடுக்கும் நபரை முதலில் தாக்குக்கிறது. பின்னர் முட்டைகளை வைத்திருந்த பெண்ணை தாக்கியது. அதன் தாக்குதலை அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. அப்படி ஒரு வலுவான தாக்குதலாக அது இருந்தது. 


மேலும் படிக்க | பாம்பையே பதம் பார்த்த பாம்பு கழுகு..பதற வைக்கும் வைரல் வீடியோ


திருட்டுத்தன்மாக மயிலின் முட்டைகளை எடுத்துச்செல்ல வந்தவர்களை தாக்கி, பெண் மயில் தன் முட்டைகள் திருடப்படாமல் காப்பாற்றியது. 


மயில் கொடுத்த மாஸ் பதிலடியின் வீடியோவை இங்கே காணலாம்: 


 



இதற்கு முன்பும், முட்டையை திருடியதற்காக ஒரு நபரை பெண் மயில் தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வைரலான வீடியோ @TheFigen_ என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. சுமார் 10 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | சத்தியமா... உங்க கண்களை நீங்களே நம்ப மாட்டீங்க: வினோத விபத்தின் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ