வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகளின் வீடியோக்களுக்கென இனையத்தில் ஒரு பல ரசிகர் பட்டாளமே உள்ளது. தினமும் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. சில விடியோக்கள் சிரிப்பை வரவழைத்தாலும், சில வீடியோக்கள் பீதியை கிளப்புகின்றன. அப்படி திகிலூட்டும் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


ஒரு வீட்டின் முற்றத்தில் இரு பெரியவர்கள் இருப்பதையும், ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருப்பதையும் வீடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. அப்போது திடீரென்று ஒரு நபர் எதையோ பார்த்து பயந்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பது போல தெரிகிறது. மற்றொருவரும் எதையோ பார்க்க, அவர் வேகமாக வந்து குழந்தையை தூக்கிக்கொள்கிறார். இருவரும் ஓடி போய் வீட்டிற்குள் நுழைந்து கதவை சாத்திக்கொள்கிறார்கள். அப்படி எதை பார்த்து இவர்கள் இருவரும் இவ்வளவு பயந்தார்கள் என நமக்கு வியப்பு ஏற்படுகிறது.


மேலும் படிக்க | Viral Video:பல ஆண்டுகளாக எரியும் ‘நெருப்பு மலை’! அணைக்க முடியாமல் நீடிக்கும் மர்மம்! 


ஒரு மிகப்பெரிய நீளமான கருநாகம் மிக வேகமாக வீட்டை நோக்கி வருகிறது. நாம் அதிசயிக்கும் வேகத்தில் வரும் அந்த பாம்பு வீட்டின் உள்ளே நுழையப் பார்க்கிறது. உள்ளே செல்ல வழி எங்கே இருக்கிறது என்று தேடுகிறது. பின்னர், அது வந்த வழியே திரும்பிச் செல்கிறது.


இந்த வீடியோவை பார்த்து நம் இதயங்கள் விக்கித்துப்போகின்றன. அந்த நபர்கள் பாம்பை பார்க்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என்ற கேள்வி நம் அச்சத்தை அதிகப்படுத்துகின்றது. பாம்பின் தோற்றமும், அதன் நீளமும், அனைத்தையும் விட அதன் வேகம் நம் பயத்தை பன்மடங்காக அதிகரிக்கின்றது.


பதற வைக்கும் கருநாகத்தின் வீடியோவை இங்கே காணலாம்:


வைரல் ஆகி வரும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் cinta.sholawatnabiandsholawat.atuh என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க |   பறவையை பதம் பார்த்த பச்சை நிறப் பாம்பு; கதி கலங்க வைக்கும் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ