பெங்களூரு: சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் பாம்பு குறித்த ஒரு வீடியோ பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. குறிப்பாக பைக் வைத்திருப்பவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் ஒருவித பயம் ஏற்படும். அதேநேரத்தில் அவர்கள் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையாகவும் இருக்கவும் இந்த வீடியோ காட்சி உதவும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வீடியோ மட்டுமில்லை, சமீபகாலமாக ஏரளாமான பாம்புகள் இருசக்கர வாகனத்தில் இருந்து மீட்கப்படும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதைக் கண்டு வருகிறோம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளிர்ந்த காலநிலைக் காரணமாக பாம்புகள் அடிக்கடி காலணிகள் மற்றும் பைக்குகளில் பதுங்கிக்கொள்கின்றன. இதன் காரணமாக தான் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அடிக்கடி அறிவுறுத்துகிறார்கள். அந்த வகையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ கொஞ்சம் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. ஏனென்றால் நாம் எதிர்பார்க்காத இடத்தில் பாம்பு பதுங்கியிருக்கும் காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது.


பாம்புகளில் விஷம் கொண்ட பாம்பு மற்றும் விஷமற்ற பாம்பு என பல வகைகள் உள்ளன. இருப்பினும், பெரும்பாலான மக்கள் பாம்பு என்றாலே பயப்படுகிறார்கள். இருப்பினும் பாம்பு என்று சொன்னாலே, அங்கு ஒரு பெரும் கூட்டம் கூடிவிடுகிறது. "அடுத்து என்ன நடக்கப்போகிறது" என்ற ஆர்வத்தில் மக்கள் கூடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் உள்ள தேவாங்கரே என்ற இடத்தில் அரங்கேறியுள்ளது. 


மேலும் படிக்க | வாலை பிடித்த சிறுவன்: பாம்பு சும்மா விட்டுதா, செமயா கொடுத்ததா? வைரல் வீடியோ


வீடியோவில் தேவாங்கரே காவல்நிலையத்திற்கு முன்பாக ஒரு சிகப்பு கலர் பைக் ஒன்று நிற்பதை காண முடிகின்றது. அதன் இருக்கைக்கு கீழே, பெட்ரோல் டேங்க் பக்கத்தில் பாம்பு சுருண்டு கிடக்கிறது. இதை அறிந்து பக்கத்தில் இருப்பவர்கள் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதுவும் அந்த பைக் ஒரு காவல்துறை அதிகாரியின் பைக்காகும்.


போலீஸ் பைக்குக்குள் புகுந்த பாம்பின் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. பலர் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். ‘போலீசின் பைக்கிலேயே ஒழிஞ்சிக்க இந்த பாம்புக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்!!’ என கிண்டலாக கூறியுள்ளார். மற்றொருவர், ‘திருடனுக்குதான் பயன் வேண்டும், பாம்புக்கு என்ன பயம்’ என அதற்கு பதில் அளித்துள்ளார். 


மேலும் படிக்க | தென்னை மரம் ஏறும் ராட்சத மலைப்பாம்பு; அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ