பெரும்பாலான மக்களுக்கு செத்துப்போன பாம்பை கண்டாலே உடல் நடுங்கும், அதிலும் உயிருடன் பாம்பை கண்டால் சொல்லவே வேண்டாம்.  பாம்பை தூரமாக பார்த்தாலே பயப்படும் நமக்கு நாம் பயன்படுத்தும் வாகனத்தினுள் பாம்பு புகுந்துவிட்டால் எவ்வளவு பயமாக இருக்கும், அப்படி ஒரு திகிலான சம்பவம் தான் மத்திய பிரதேசத்தின் நர்சிங்பூர் பகுதியில் அரங்கேறியுள்ளது.  இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகியும் உள்ளது.  நசீர் கான் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை முதல் நாள் இரவு தனது வீட்டு வாசலில் நிறுத்திவைத்து விட்டு உறங்க சென்றுவிட்டார்.  வழக்கம்போல மறுநாள் வேலைக்கு போவதற்காக காலையில் சீக்கிரமாக எழுந்து வந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Video: கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து; 6 யாத்ரீகர்கள் மரணம்; மனம் பதற வைக்கும் காட்சி!


அப்போது வினோதமான சத்தம் வருவதை கேட்ட அவர் இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அக்கம்பக்கம் பார்த்திருக்கிறார், அப்போது தான் தனது இருசக்கர வாகனத்தின் ஸ்பீடோமீட்டரில் இருந்து வருவதை அறிந்தார், அதனுள் ஒரு பாம்பு சிக்கிக்கொண்டு ஒலியெழுப்பி இருக்கிறது.  பின்னர் நசீர் பயத்துடன் தனது வண்டிலிருந்து இறங்கி ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்திருக்கிறார்.  தகவலறிந்து வந்த நபர்கள் அந்த ஸ்பீடோமீட்டரிலுள்ள பாம்பை வெளியில் எடுக்க போராடினர், அந்த பாம்பு எப்படி தனது இருசக்கர வாகனத்திற்குள் புகுந்தது என்று நசீர் கானுக்கு தெரியவில்லை.


 



இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், இருசக்கர வாகனத்தின் ஸ்பீடோமீட்டரிலிருந்து பாம்பை வெளியில் எடுக்க நசீருக்கு மற்ற நபர்கள் எப்படி உதவினார்கள் என்பதை காட்டுகிறது.  ஸ்பீடோமீட்டரை தட்டி பார்த்தும், வாகனத்தை அசைத்து பார்த்தும் பாம்பை வெளியில் எடுக்க முயன்றனர், ஆனால் பாம்பு வெளியில் வரவில்லை.  பின்னர் ஒருவழியாக அங்கிருந்த மக்கள் ஸ்பீடோமீட்டரின் கண்ணாடியை உடைத்து ஒருவழியாக அந்த பாம்பை வெளியேற்றினர், இந்த வீடியோ இணையத்தின் வைரலாகி பலரின் கவனங்களையும் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | Viral Video: நாய்க்குட்டியை கட்டி அணைக்கும் பூனை; இணையத்தை கலக்கும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ