வைரல் வீடியோ: வித்தியாசமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் உடனே ட்ரெண்டிங் ஆகிவிடுகின்றன. இதயத்தைத் தொடும் வீடியோக்கள் மட்டுமல்ல, அதிர்ச்சியூட்டும் காணொளிகளும் சமூக வலைதளங்களில்  வைரலாகின்றன. அவை இணையவாசிகளை கவர்ந்தால், அவற்றை தொடர்ந்து பகிரும் விலங்கு ரசிகர்கள், அவற்றை வைரல் ஆக்கிவிடுகின்றனர்.வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் மனதை விட்டு நீங்குவதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகள், அதிலும் அதிக அபாயம் கொண்ட விலங்குகள், அல்லது பார்ப்பதற்கு அரிய விலங்குகள் என மாறுபட்ட வீடியோக்கள் வெளியானதுமே வைரலாகிவிடுகிறது.


ஆடு என்றால், ஆடு தானே என அலட்சியமாக நினைத்துவிட வேண்டாம். ஜாலியாய் மட்டன் பிரியாணி சாப்பிடுவதற்காக விற்கப்படும் வளர்ப்பு ஆடுகள் மட்டும் ஆடுகள் அல்ல, ஆடுகளின் இனத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் சில பார்த்தால், மிகப் பெரிய விலங்காக நமக்கு பிரமிப்பு ஊட்டும்.


அப்படி ஒரு பிரம்மாண்டமான மலை ஆட்டின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. ஆடு, சிங்கம் போல நடந்து வந்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்... வீடியோவை பார்த்து மகிழுங்கள்.


மேலும் படிக்க | கொஞ்சம் விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும், மலைபாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்


அழகாக ஒய்யார நடை பயிலும் இதுபோன்ற மலை ஆட்டை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. காட்டெருமையைப் போல பலமான இவை, 45 முதல் 140 கிலோ எடை வரை  கொண்டவை. வீடியோவில் ‘கேட்வாக்’ செய்யும் ஆட்டின் வீடியோவைப் பாருங்கள்....



 வெள்ளாடு இனத்தைச் சேர்ந்த இந்த ஆடுகள், மலை ஆடுகள் ஆகும். இந்த மலை ஆடுகள் மிக உயரமான, செங்குத்தான மலைப் பாறைகளில் எளிதாக ஏறி புற்களை மேயும் தன்மை கொண்டவை. இந்த வலிமையான ஆடுகள் செங்குத்தான மலைப் பாறைகளில் தங்கி புற்களை மேயும். வேட்டைக்காரர்களுக்கும் சிம்ம சொப்பனமாகும் ஆடு வகை இது. 


மேலும் படிக்க | தாயை காப்பாற்றிய சிறுவன்...மனதை உருக வைக்கும் வைரல் வீடியோ


மலை ஆடுகள், இனப்பெருக்கத்திற்காக மட்டும், பெண் மலை ஆடுகளை தேடி வரும். மிகவும் குளிரான பகுதியில் வசிக்கும் இந்த ஆடுகளின் தோல் மிகவும் தடிமானனவை. இவற்றிற்கு இருக்கும் அடர்த்தியான முடிகள்,  பனிப்புயல் மற்றும் கடும் குளிரிலிருந்து இவற்றை காக்கிறது. குட்டையான கால்களைக் கொண்டிருந்தாலும், உறுதியான கால்களைக் கொண்டவை மலை ஆடுகள். 


வெள்ளை நிறத்தில் காணப்படும் மலை ஆடுகள் வட அமெரிக்காவின் அலாஸ்கா,வாசிங்டன், கொலராடோ, அல்பர்ட்டா, பிரிட்டிசு கொலம்பியா, தெற்கு டகோட்டா, ஐடஹோ, மொன்ட்டானா போன்ற இடங்களில் வசிக்கின்றன.


மேலும் படிக்க | உடலை சுற்றி வளைத்த பாம்பினால் உயிர் போகுமா? திகிலூட்டும் பாம்புச் சண்டை வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ