Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றில் பல பார்ப்பதற்கு நம்ப முடியாத அளவில் வினோதமாக இருக்கின்றன. அன்றாட வாழ்வில் பல வித அழுத்தங்களை சந்திக்கும் நாம் இந்த வீடியோக்களை பார்த்து சற்று ரிலாக்ஸ் ஆகிறோம். குறிப்பாக அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகள், வீட்டில் நடக்கும் நிகழ்வுகள், பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் நிகழ்வுகள் என நம் சாதாரண வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் இந்த வீடியோக்கள், நம் முகத்தில் புன்முறுவலை வரவழைக்கத் தவறுவதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கணவன் மனைவி இடையிலான சண்டையின் வீடியோக்கள் இணையத்தில் சட்டென்று வைரல் ஆகி விடுகின்றன. தற்போதும் அப்படிப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றது. பாசம் அதிகமாகி அதுவே ஆபத்தாகிப்போன ஒரு நிகழ்வின் வீடியோதான் இது. யாரும் நம்ப முடியாத ஒரு காரணத்துக்காக மனைவி கணவனை அடித்த சம்பவம் சமீபத்தில் பிரபலமானது. அந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அப்படி என்னதான் நடந்தது என வீடியோவில் தோன்றும் ஒரு ஊடகவியலாளர் விளக்குகிறார். 


என்னதான் நடந்தது? 


நடந்தது இதுதான். இரவு உணவு சாப்பிடாமல் தூங்கிய கணவர் மீது கோவம் கொண்ட மனைவி அவரை கிரிக்கெட் மட்டையால் அடிக்கிறார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தையல் போடும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது. அவருக்கு 15 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு! கூச்சத்தில் உறவினர்கள்: வீடியோ வைரல் 


நடந்தது எங்கே?


இந்த வினோத சம்பவம் ராஜஸ்தானின் பிகானேரில் ரித்மல்சார் கிராமத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. கணவரிடம் இரவு உணவை சாப்பிடுமாறு மனைவி கூறியுள்ளார். ஆனால், பசி இல்லாத காரணத்தினாலோ, அல்லது வேறு காரணங்களினாலோ, அவர் சாப்பிடாமல் தூங்கி விடுகிறார். இதனால் மனைவிக்கு பயங்கர கோபம் வருகிறது. அவர் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். கோப மிகுதியால் அவர் கிரிக்கெட் மட்டையை எடுத்து கணவனை அடித்து விடுகிறார். அதில் கணவனுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. தையல் போடும் அளவுக்கு தலையில் காயம் ஏற்படுகிறது. 


 



பயங்கர பாசம்-னா இதுதானா?


மனைவியின் பாசம் எல்லை தாண்டியதால், கணவனுக்கு பயங்கரமான விளைவு ஏற்பட்டது. இந்த அதிகப்படியான பாசம் கணவனுக்கு ஆபத்தாகிப் போனது. கணவனை மனைவி அடித்ததை அடுத்து அவர் அலறியுள்ளார், வலியால் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்றியதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.   


சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் memes.bks என்ற பக்கத்தில் இந்த விடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. பயனர்கள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். மனைவிடம் கணவன் வாங்கிய அடியை பார்த்து சில கணவன்மார்கள் பீதிக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


மேலும் படிக்க |   பாம்புக்கு முரட்டுத்தனமா காதல் வந்தா என்ன ஆகும்? வீடியோ வைரல் ஆகும்!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ