பூமி என்பது அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என வள்ளலார் பாடியிருக்கிறார். எனவே இந்த பூமி புல், பூண்டு என அனைத்துக்கும் உரித்தானது. ஆனால் ஆறறிவு கொண்ட மனிதர்களோ தங்களுக்கு மட்டும்தான் இப்புவி சொந்தம் என்ற நினைப்பில் ஏகப்பட்ட அட்டூழியங்களை செய்துவருகின்றனர். குறிப்பாக மற்ற உயிர்களை உயிரென்றே மதிக்காத தன்மை பலரிடம் வளர்ந்து நிற்கிறது. அப்படி வளர்வது நிச்சயம் இச்சமூகத்துக்கு ஆபத்தான ஒன்று. அதிலும் வாகனத்தில் மனிதர்கள் செல்லும்போது அந்த சாலையே நம்முடையதுதான் எப்படி வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நினைப்பு மேலோங்கிவிடுகிறது.
அதனால் வாகனத்தின் குறுக்கே எந்த உயிர் வந்தாலும் அதன் மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள். ஆனால் அது தொடர்பான எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் அந்த இடத்தை எளிதாக கடந்துவிடுகிறார்கள். அதற்கு ஒரே காரணம் மனிதர்களுக்கு மட்டும்தான் வலி, குடும்பம் என அனைத்தும் இருக்கின்றனவென மனதுக்குள் ஊறிப்போன எண்ணம். அப்படி மனிதர்களால் பல உயிர்கள் இந்த பூமியில் உயிரிழந்திருக்கின்றன.
அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு உயிர் மனிதர்களால் போயிருக்கிறது. சாலை ஒன்றில் வாகனத்தை வேகமாக ஓட்டிவந்த ஒருவர் நாய்க்குட்டி மீது வாகனத்தை ஏற்றிவிட்டார். இதனால் அந்தக் குட்டி நாய் உயிரிழந்துவிட்டது. இதனையடுத்து அதன் தாய் நாயும், மற்றொரு குட்டியு நாயும் உயிரிழந்த குட்டி நாயின் அருகில் நின்றுகொண்டு அழும் வீடியோ காண்போரை கலங்கச் செய்துள்ளது.
மேலும் படிக்க | கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்: கண்ணூரில் பன்றிகளைக் கொல்ல உத்தரவு
இந்த வீடியோவை பார்த்த பலரும், வலியும், பாசமும் மனிதர்களுக்கு மட்டுமில்லை அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இனியாவது சாலையில் செல்லும்போது மற்ற உயிரினங்களுக்கு மதிப்பு கொடுக்க மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்று பதிவிட்டுவருகின்றனர். முக்கியமாக, இயற்கை மனிதர்களுக்கு ஆறறிவு கொடுத்திருப்பது மற்ற உயிர்களை அழிப்பதற்கு அல்ல, காப்பதற்கு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | பின் லேடனின் வலது கையாக இருந்த அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார்: ஜோ பைடன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ