தளபதி விஜய்யின் பிறந்த நாளில், அவர் பாடிய பாடல்களின் ஒரு தொகுப்பு...
நடிகர் விஜய் பாடிய சில பிரபலமான பாடல்களின் தொகுப்பை இந்த பதிவில் பகிர்ந்துள்ளோம். நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
தென்னகத்து திரை பிரபலமான தளபதி விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளை (ஜூன் 22) கொண்டாடுகிறார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் தனது ஆளுமை செலுத்தி வரும் விஜய்க்கு உலகெங்கிலும் பல கோடி ரசிகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய புகழ் நாளுக்கு நாள் பெருமளவில் வளர்கிறது. குறிப்பாக தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
அவரது பிறந்தநாளில், ட்விட்டரும் அவரது ரசிகர்களால் ஆர்பரித்து வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #ThalapathyVijay, #HappyBirthdaySir போன்ற போக்குகளை பிரபலமாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது ரசிகர்களின் மகிழ்விற்காக இன்று அவர் பாடிய சில பிரபலமான பாடல்களின் தொகுப்பை நாம் இந்த பதிவில் பகிர்ந்துள்ளோம். நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
வரிசை எண் | வருடம் | பாடல் |
1 | 1994 | பாம்பே சிட்டி சுக்கா ரோட்டி |
2 | 1995 | ஓரு கடிதம் எழுதினேன் |
3 | 1995 | ஐய்யயோ அலமேலு |
4 | 1995 | கோத்தகிரி குப்பம்மா |
5 | 1995 | தொட்டபெட்டா ரோட்டு மெலே |
6 | 1996 | பம்பாய் பார்டி ஷில்பா ஷெட்டி |
7 | 1996 | திருப்பதி பொனா மொட்டாய் |
8 | 1996 | சிக்கன் கரி |
9 | 1997 | 5-ஆம் நம்பர் பசிலே |
10 | 1997 | ஓர்மிலா ஓர்மிலா |
11 | 1997 | ஓ பேபி பேபி |
12 | 1998 | டிக் டிக் டிக் |
13 | 1998 | மௌரியா மௌரியா |
14 | 1998 | காலத்துக்கேத்த கானா |
15 | 1998 | நிலவே நிலவே |
16 | 1998 | சந்திர மண்டலத்தை |
17 | 1999 | நா தம்மடிக்கிற ஸ்டைல பாத்து |
18 | 1999 | ஜுதாடி லைலா |
19 | 1999 | ரோடுலா ஓரு |
20 | 1999 | தங்க நிரத்துக்கு |
21 | 2000 | மிசிசிப்பி நதி குலுங்கா |
22 | 2001 | என்னோடா லைலா |
23 | 2002 | உல்லத்தை கிள்ளாதே |
24 | 2002 | கோகோ கோலா (பொடாங்கோ) |
25 | 2005 | வாடி வாடி சிடி |
26 | 2012 | கூகிள் கூகிள் |
27 | 2013 | வாங்கண்ணா வனக்கங்கண்ணா |
28 | 2014 | கண்டங்கி கண்டங்கி |
29 | 2014 | செல்பி புல்லா |
30 | 2015 | யேண்டி யேண்டி |
31 | 2016 | செல்ல குட்டி |
32 | 2017 | பாப்பா பாப்பா |
33 | 2019 | வெரிதானம் |
34 | 2020 | குட்டி கதை |