மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு பழதாகி விபத்து ஏற்பட்டத்தில் 20-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தாலி நாட்டில் தலைநகர் ரோமின் ரிபப்பிளிக்கா மெட்ரோ நிலையத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் 20-க்கு மேற்பட்ட கால்பந்து ரசிகர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள மைதானத்தில் Roma மற்றும் CSKA Moscow அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் லீக் போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியை காண சென்ற ரசிகர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.



இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விபத்தில் சிக்கியவர்களை மீட்ட ரோம் தீயனைப்பு துறையினர் காயமடைந்தவர்களை அருகில் இருந்த மருத்தவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், பழுதடைந்த நகரும் படிக்கட்டினை சீறமைக்கும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து ரோம் நகர மேயர் விர்ஜினியா ராக்ஜி தெரிவிக்கையில்... காயமடைந்தவர்களுடனான ஒற்றுமைக்காக தான் நிற்பதாகவும், அதிகாரிகள் தவறான காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நகரும் படிக்கட்டில் "சில ரஷ்ய கால்பந்தந்து அணி ஆதரவாளர்கள் ஆடம்பரத்தில் குதித்து நடனமாடினார்கள்" இதன் காரணமாகவும் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



விபத்துக்குள்ளான வீடியோவில் ரிபப்பிளிக்க மெட்ரோ நிலையத்தில் பதிவாகியுள்ளது. ஆரம்பத்தில் இயல்பான வேகத்தில் சேன்ற நகரும் படியானது திடீரென வேகம் எடுத்துள்ளது. இயல்புநிலையில் இத்தகு விபத்து நடக்க வாய்ப்புகள் இல்லை, விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இச்சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ரோம் நாட்டின் டெர்மினி ரயில் நிலையம் அருகில் உள்ள மெட்ரோ நிலையம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.