எவரெஸ்டிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசல்! நீண்ட வரிசையில் நிற்கும் வைரல் வீடியோ!
உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மேலும் பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
உலகில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மலையேறுபவர்களுக்கு இமயமலையில் ஏற வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் பல அதிசயங்களை கொண்டுள்ளது. ஆனால் இமயமலையில் ஏறி பலர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர். இந்த ஆண்டு மலையேறும் சீசன் தொடங்கியதும் பலரும் எவரெஸ்டில் குவியத் தொடங்கினர். ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டாலும் உயிரிழப்புகள் அதிகரித்து தான் வருகிறது. கடந்த வாரம் மட்டும் ஐந்து மலையேறுபவர்கள் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் அவ்வப்போது பல மக்கள் ஆக்சிஜன் உதவியுடனும், நடக்க முடியாமல் கயிற்றின் உதவியுடன் எவரெஸ்டில் ஏற முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகும்.
மேலும் படிக்க | முத்தம் கொடுத்தது ஒரு குத்தமா... மணமகனை அடித்து துவைத்த மணப்பெண் வீட்டார்..!!
தற்போது ரோடுகளில் கூட்ட நெரிசல் ஆகுவதை போல எவரெஸ்டிலும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. சீசன் ஆரம்பித்ததும் பலரும் மலை ஏற வந்துள்ளதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் ராஜன் திவேதி என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் நூற்றுக்கணக்கான மலையேறுபவர்கள் கொஞ்சம் கூட முன்னேற முடியாமல் வரிசையில் நிற்பதை காண முடிகிறது. இது குறித்து ராஜன் கூறுகையில், எவரெஸ்ட் மலையில் ஏற முயன்றவர்களில் பலர் முறையான பயிற்சி பெறாதவர்களாக உள்ளனர். மலையேற்ற அனுபவம் இல்லை என்றால் மிகவும் கடினம். அதுவும் குறிப்பாக எவரெஸ்ட் போன்ற இடத்தில் மிகவும் கடினம் என்று குறிப்பிட்டார்.
மேலும் பிரிட்டிஷ் எழுத்தாளர் இயன் கேமரூன், எவரெஸ்ட் மலையில் ஏறுவதை மிக மோசமான சாகசம் என்று குறிப்பிட்டுள்ளார். "நான் தகுதியுடனும் திறமையுடனும் இருக்கிறேன், ஆனால் எவரெஸ்ட்டில் ஏற எனக்கு விருப்பம் இல்லை. எவரெஸ்ட்டில் ஏறுவதை சிலர் ஈகோ டூரிசம் என்று அழைக்கின்றனர். இவ்வளவு உயரத்தில் நீண்ட வரிசையில் நிற்க மக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்யை செலவு செய்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்த உலகின் முதல் நபரான காஞ்சா ஷெர்பா மலையின் தற்போதைய நிலை குறித்து பேசியுள்ளார். "எவரெஸ்ட் தற்போது மிகவும் அழுக்காகிவிட்டது. அங்கு வரும் மக்கள் சாப்பிட பொருட்களையும், தாங்கள் கொண்டு வரும் பொருட்களையும் அப்படியே போட்டுவிட்டு செல்கின்றனர். அந்த பொருட்களை யார் சுத்தப்படுத்துவது? மேலும் சிலர் மலையில் உள்ள விரிசல்களில் குப்பைகளை போடுகின்றனர். பின்னாளில் பனி உருகும் போது அவை கீழே தான் வரும் என்பது அவர்களுக்கு நினைவில் இருக்காதா? ஒவ்வொரு ஆண்டும் இது மோசமாகி கொண்டு தான் போகிறது. மற்ற மலைகளை விட எவரெஸ்ட் குப்பை கூடாரமாக மாறி வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் படிக்க | நடுரோட்டில் போலீசை வம்பிழுக்கும் நாய்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ