நடுரோட்டில் போலீசை வம்பிழுக்கும் நாய்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தமிழக போக்குவரத்து காவலர் ஒருவருக்கும், தெரு நாய்க்கும் இடையே உள்ள மனதைக் கவரும் வீடியோ ஒன்று வெளியாகி காண்போர் மனதில் இடம் பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 26, 2024, 01:20 PM IST
  • நாய் குட்டிக்கு உதவும் போக்கு வரத்து காவலர்.
  • நாயும் அவருடன் சேர்ந்து விளையாடுகிறது.
  • இணையத்தில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
நடுரோட்டில் போலீசை வம்பிழுக்கும் நாய்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! title=

பொதுவாக நாய்கள் மிகவும் விசுவாசமானவை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவை மனிதர்களுக்கு சிறந்த நண்பராக இருக்கின்றன. நாய்கள் மனிதர்களுடன் வீட்டில் ஒருவராக இருந்து வருகின்றன. ஒருமுறை ஒரு நாய்க்கு சாப்பாடு வைத்தால் காலம் முழுக்க நன்றி மறவாமல் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நாய் பிடித்தமான வளர்ப்பு பிராணியாக உள்ளது. இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், மகிழ்ச்சியை கொண்டாட கூட நேரம் இல்லாமல் உள்ளது. குடும்பத்தினருடன் சிறிது நேரம் உட்கார்ந்து பேச கூட நேரம் இல்லாமல் பலர் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், போக்குவரத்து காவலருக்கும் நாய்க்கும் இடையிலான அழகான பிணைப்பைப கூறும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

மேலும் படிக்க | கொதிக்கும் பாலைவன மணலில் அப்பளம் சுடும் ராணுவ வீரர்... வைரலாகும் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் நாய் ஒன்று பணியில் இருக்கும் போக்குவரத்து காவலரின் கால்களை சுற்றி சுற்றி வருகிறது. மேலும் அவரை தன்னுடன் விளையாட அழைக்கிறது. இந்த அழகான வீடியோ காண்போரின் மனதை கொள்ள கொண்டுள்ளது. மேலும் அனைவரது முகத்திலும் புன்னகையை வரவைத்துள்ளது. தற்போது வைரலாகும் இந்த வீடியோவில், இரவில் பரபரப்பாக இயங்கி வரும் சாலையில் போக்குவரத்து போலீஸ் தன்னுடைய வேலையை செய்து வருகிறார். ஒரு புறம் வரும் வாகனங்களை நிறுத்தி, மற்றொரு புறம் செல்லும் வாகனங்களுக்கு சிக்னல் கொடுத்து வருகிறார். இந்த சமயத்தில் ஒரு நாய் அவரை சுற்றி சுற்றி வருவதை காணலாம். காவலரின் கவனத்தை ஈர்க்க இவ்வாறு செய்கிறது.

நாயின் இந்த விளையாட்டுத்தன்மை போக்குவரத்து காவலரின் கவனத்தையும் ஈர்க்கிறது. நாயின் பாதுகாப்பை மனதில் வைத்து, எந்த வாகனமும் அதன் மீது இடிக்காத பட்சத்தில் போலீஸ்காரர் அந்த நாயை ரோட்டில் இருந்து ஓரமாக கூட்டி சென்று விடுகிறார். இந்த வீடியோவை @blue_cross_rescues என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மேலும் "போக்குவரத்துக் கட்டுப்பாடு இப்போது மிகவும் அழகாக இருக்கிறது” கேப்ஷனும் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ கடந்த மே 20 அன்று பகிரப்பட்டடு தற்போது வரை 5 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.

மேலும் தினமும் இந்த வீடியோவை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாயின் பாசமும், போக்குவரத்து காவலரின் கனிவான இதயமும் பலரின் மனதில் இடம்பிடித்துள்ளது. இந்த பதிவுக்கு நெட்டிசன்களிடம் இருந்து கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. "இந்த மகிழ்ச்சியை எந்த பணமும் வாங்க முடியாது" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். "இதனை பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது," என்று ஒருவரும், "குழந்தையின் மகிழ்ச்சியான பாதங்களை என்னால் பார்க்க முடிகிறது, என்று மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளார். "இதுதான் எங்களுக்கு உண்மையிலேயே தேவைப்பட்ட சமுதாயம்" என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | வேற்றுகிரகவாசிகள் விஸிட் அடித்தார்களா என்ன... வானில் முளைத்த பிரகாசமான தூண்கள்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News