பிரபல பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் பல பெண்களுடன் பேசிய வாட்ஸ் அப் சாட்டிங், ஸ்கிரீன் ஷாட்டுகளாக இணையத்தில் வெளியீடு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் பெண்களுடன் பேசி ஏமாற்றியதாக பல வாட்ஸ் அப் ஸ்கீரின்ஷாட்டுகளை ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்தார். "இமாம் உல் ஹக் 7லிருந்து 8 பெண்களுடன் டேட்டிங் செய்து, அவர்களை ஏமாற்றியது  வெளிப்படையாக தெரிகிறது. அவர்கள் அனைவரிடமும் அவர் சிங்கிள் என்று சொல்லி தான் பழகியுள்ளார். அதில் ஒரு பெண்ணின் ஸ்கீரின்ஷாட்டுகளை பகிர்ந்துள்ளார்," கிரிக்கெட் வீரர் பேசியதாக கூறும் உரையாடலை ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.


ட்விட்டரில் பதிவிட்டவர் அந்த பதிவிகளை நீக்கிவிட்டார். ஆனால், அந்த பதிவின் ஸ்கீரின்ஷாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்தச் சம்பவம் ட்விட்டரில் கிரிக்கெட் வீரர் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், சிலர் அந்தப் பெண்களை விமர்சித்து வருகிறார்கள்.



உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும், நெட் ரன்ரேட் அடிப்படையில், நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றது. இதனால் அரையிறுதிக்கு செல்லாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியது. வங்கதேசத்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் சதமடித்தார். சதம் அடித்ததன் காரணமாக, அந்நாட்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் இளம் வீரரான இமாம் உல் ஹக். 


இது தொடர்பாக இமாம் உல் ஹக் விளக்கம் ஏதும் அளிக்காதது சந்தேகத்தை உறுதி செய்வதாகவும் பலர் கூறியுள்ளனர். இவர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ஸாம் உல் ஹக்கின், உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.