பாகிஸ்தான் தோல்விக்கு சானியா தான் காரணம்.. பாக்., ரசிகர்கள்!
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி கண்டதற்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தான் காரணம் என பாக்., ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்!
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி கண்டதற்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தான் காரணம் என பாக்., ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் கணவருமான சோகிப் மாலிக், முதல் பந்திலேயே "டக் -அவுட்" ஆகி வெளியேறினார். இது பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைய செய்துள்ளது.
போட்டியின் நாள் முன் இரவு பாகிஸ்தான் வீரர்கள் சிலருடன் சானியா மிர்சா லண்டனில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் உணவருந்த சென்றுள்ளனர். இங்கு பாக்கிஸ்தான் அணி வீரர்கள் போதை வஸ்துக்களையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வினை அங்கிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவிடன் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில் இந்த வீடியோவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ரசிகர்கள் வீரர்கள் மற்றும் சானிய மர்சாவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
குறிப்பாக "இந்திய அணியுடனான முக்கியமான போட்டிக்கு முதல் நாள் இரவு நன்றாக ஓய்வெடுக்காமல் இப்படி விருந்தில் பங்கேற்றால், உடல் அசதி ஏற்பட்டு ஆட்டத்தில் சிறப்பாக விளையாட முடியாது என உங்களுக்கு தெரியாதா? சோகிப் மாலிக்குடன் விருந்தில் பங்கேற்றதன் மூலம், இந்தியாவுடனான ஆட்டத்தில் அவர் "டக் -அவுட்" ஆனதுக்கு நீங்கள் காரணமாகிவிட்டீர்கள்" என, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், தமது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு ட்விட்டரில் தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சானியா மிர்சா "ஹோட்டலில் நாங்கள் உணவருந்தும் காட்சியை, எங்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள முட்டாள்களே... ஹோட்டலுக்கு சென்று, குடும்பத்துடன் உணவருந்த கூட எங்களது தனியுரிமை இல்லையா? மேட்ச்சில் தோற்றால், உணவுகூட உட்கொள்ளக்கூடாதா என்ன?" என்று சானியா காட்டமாக பதில் அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.