India vs Pakistan: இந்தியாவும் பாகிஸ்தானும் 2021 உலகக் கோப்பை 2021 போட்டி துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மான்செஸ்டரில் நடந்த 2019 உலகக் கோப்பை லீக் போட்டிக்குப் பிறகு இரு அணிகளும் மோதும் முதல் போட்டி இதுவாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்பார்த்தது போலவே இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. எந்தவொரு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்ததில்லை. 50 ஓவர் ஒருநாள் வடிவத்தில் இந்திய அணி 7-0 என்ற கணக்கிலும், அதே நேரத்தில் டி-20 வடிவத்தில் 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று சாதனை புரிந்துள்ளது.


தனது தலைமையில் இதுவரை ஒரு ஐசிசி கோப்பைக்கூட விராட் கோஹ்லி வெல்லவில்லை என்பதையைத் தவிர்த்து பார்த்தால், 2007 ஆம் ஆண்டு முதல் டி-20 உலக கோப்பையை இந்திய அணியை வழிநடத்திய மகேந்திர சிங் தோனி பெற்றுக்கொடுத்தார். அதேபோல நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 50 ஓவர் உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தையும் அவர் பெற்றுக்கொடுத்தார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. அவர் தற்போது டி-20 உலக கோப்பையில் பங்கேற்றுள்ள இந்திய அணிக்கு வழிகாட்டியாக நியமித்திருப்பது இந்திய அணி மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.


ALSO READ |  Ind vs Pak: விராட் கோலிக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுக்கும் தோனி- வைரல் வீடியோ


இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ள நிலையில், இருநாட்டு ரசிகர்களின் கேலி, வேடிக்கை, கிண்டல் தொடங்கியது. அதன் வரிசையில், பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இந்திய வீரர்களிடம், எம்எஸ் தோனியை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியை வழிநடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 



அந்த வீடியோவில் கிரிக்கெட் ரசிகை, , "இந்திய வீரர்கள் பயிற்சி முடிந்த பிறகு திரும்பி செல்லும்போது, இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுலை பார்த்து, தயவு செய்து நாளை நடக்கவுள்ள போட்டியில் நன்றாக விளையாட வேண்டாம். நோ, தயவுசெய்து நாளை நன்றாக விளையாட வேண்டாம்" எனக் கூறுகிறார். 


அப்பொழுது, அந்த வீடியோவில் ராகுலுக்கு பின்னால் தோனி வருகிறார். ரசிகர்களின் கேள்விக்கு, "ஹுமாரா காம் ஹி ஐசா ஹை" (எங்களுடையே பணியே அதான்)  என்று பதிலளித்தார். 


ALSO READ |  INDvsPAK ஆட்டைக்கு ரெடியா! வெற்றி பெற இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம்?


மேலும் ராகுலை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விலையாட வேண்டாம் எனக் கேட்ட அதே பெண், எம்எஸ் தோனியிடம், "மஹி இந்த போட்டியை (IND vs PAK) விட்டுவிடுங்க ... அடுத்த போட்டியில் வழிகாட்டியாக இருங்கள்... தயவுசெய்து இந்த போட்டி வேண்டாம்" எனக் கூறினார். 


இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை 2021 தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதவுள்ளன. துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி தொடங்கும். உலகக் கோப்பை போட்டி தொடங்கியதிலிருந்து கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.


ALSO READ |  இந்தியா vs பாகிஸ்தான் போட்டி: துபாய் மைதானம் யாருக்கு சாதகம்? முழு விவரம்