பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய பாகிஸ்தான் பெண்... வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!
Dance Viral Video: பாலிவுட் பாடலுக்கு பாகிஸ்தான் பெண் ஒருவர் திருமணத்தில் ஆடிய நடனம் தற்போது இன்ஸ்டாகிராமில் பட்டையை கிளப்பி வருகிறது.
Dance Viral Video: தற்போதைய காலகட்டத்தில் திருமணம் என்பது பல்வேறு வகையில் மாற்றமடைந்துள்ளது. திருமணத்தில் எடுக்கும் வித்தியாசமான புகைப்படங்கள், வீடியோக்கள், மணமக்களின் நடனங்கள் என அனைத்தும் தற்போது இணையத்தில் வைரல் ஹிட்தான்.
திருமணத்தில் மணமக்கள் மட்டுமின்றி, மணமகனின் சகோதரி, மணமகளின் தோழி உள்ளிட்டோரின் நடனமும் இந்த வைரல் லிஸ்டில் அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டில் நடந்த திருமணத்தில் நடனமாடிய பெண் ஒருவர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்தில், பாலிவுட் திரைப்படமான கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலாவின், 'அங் லகா தே' பாடலுக்கு ஒரு பாகிஸ்தானிய பெண் நடனமாடிய வீடியோ இணையத்தில் கலக்கி வருகிறது. இந்த வீடியோவை நடாலியா காலிங் என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
மேலும் படிக்க | அய்யோ பாவம்..நாயை கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு: திக் திக் வைரல் வீடியோ
அந்த வீடியோவில் அந்த பெண் மெரூன் நிற லெஹங்கா உடை அணிந்துள்ளார். அவரது நேர்த்தியான நடன அசைவுகள் பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்து. அந்த பெண் நடனம் ஆடத் தொடங்கிய உடனேயே அந்த சிறுமியின் அட்டகாசமான நடனத்தைக் கண்டு அவளைச் சுற்றியிருப்பவர்கள் வியந்தனர். வீடியோவை பகிர்ந்தவர், அந்த நடனமாடும் பெண்ணின் மூத்த சகோதரி என தெரியவந்தது.
அவர் அந்த பதிவில்,"இன்ஸ்டாகிராம் என்னை முழுவதையும் பதிவேற்ற அனுமதிக்கவில்லை. இது எனது திறமையான இளைய சகோதரி, நான் அவளைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். எனவே இந்த தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இணையத்தில் பகிரப்பட்ட பிறகு, வீடியோ ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றது. இன்ஸ்டாகிராம் பயனர்கள் அந்த வீடியோவில் பெண்ணை பாராட்டி கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | Viral: ஜஸ்ட் மிஸ்... இளம்பெண்ணுக்கு மரண பயத்தை காட்டிய சுறா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ