Viral: ஜஸ்ட் மிஸ்... இளம்பெண்ணுக்கு மரண பயத்தை காட்டிய சுறா

Shark Viral Video: தனது எல்லைக்குள் கடலில் குதிக்க வந்த பெண்ணை, ஒரு சுறா மீன் எச்சரிக்கும் வகையில் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 22, 2023, 08:28 AM IST
  • இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
  • இதனை 15 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
Viral: ஜஸ்ட் மிஸ்... இளம்பெண்ணுக்கு மரண பயத்தை காட்டிய சுறா title=

Shark Viral Video: கடல் என்று யோசித்தாலே அனைவருக்குள்ளும் ஒரு மகிழ்ச்சியும், பயமும் சேர்ந்தேதான் ஞாபகத்திற்கு வரும். அத்தனை ஆழமும், தூரமும் கொண்ட கடல், நம் வாழ்க்கையை போலவே ஒவ்வொரு நொடிக்கும் புது புது ஆச்சர்யங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும். அடுத்த நொடி நிச்சயமில்லாமல் இருக்கும் அந்த கடலை பார்க்கும்போதும், நம்முள் புதுவித உணர்வு எழும். கடலின் உள்ளே ஒரு தனி உலகமே இருக்கிறது என்றே கூறலாம். 

சிறு மீன்கள் மீது திமிங்கலம் வரை அளவில், ஆபத்தில் என வித்தியாச, வித்தியாசமான உயிரினங்கள் கடலுக்குள் வசித்து வருகின்றன. தினமும் கடலுக்குள் செல்லும் கடலோடிகளே புதுப்புது பாடங்களை தினமும் கற்றுக்கொண்டேதான் இருக்கின்றனர். அத்தனை பிரம்மிப்புமிக்க கடலில் ஒரு பெண் படகில் இருந்து குதிக்க முயன்றபோது ஏற்பட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | புலிக்குட்டியை துரத்தி துரத்தி கொத்தும் வாத்து வீடியோ வைரல்

ஒரு இளம் பெண், கடல் குதிப்பதற்கான அதாவது ஸ்கூபா டைவிங்க் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துள்ளது அந்த வீடியோவில் தெரிகிறது. அவர் தண்ணீரில் இறங்க இரண்டு படிகளே இருந்தது. அவர் கடலில் முன்பக்கமாக டைவ் செய்ய முயன்றார். அப்போது, ஒரு நடுத்தர அளவிலான சுறா நீருக்கடியில் தோன்றியது. கடலின் மேல்புறத்தில், திடீரென வந்த அந்த சுறாவை பார்த்து, அந்த பெண் அதிர்ச்சியடைந்து பின்வாங்கினார். அதை தவிர அவருக்கு வேறு வழியில்லை.

இந்த வீடியோ ட்விட்டரில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை யார், எங்கு எடுத்தது என்பது குறித்த தகவல்கள் ஏதுமில்லை. ட்விட்டரில் @_BestVideos என்ற பயனர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 15 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது. 

அந்தப் பெண் தன் எல்லைக்குள் குதிக்கப் போகிறாள் என்பதை சுறா அறிந்திருந்தது போலவும், அவளை எச்சரிப்பதற்காக அவள் அருகில் வந்ததைப் போலவும் தோன்றியதாக வீடியோவை பார்த்தவர்கள் கருத்து தெிரிவிக்கின்றனற். இயற்கையின் நுட்பமான சமநிலையை சீர்குலைத்து மற்ற உயிரினங்களுக்கு இடையூறு விளைவிப்பது நல்லதல்ல, அது விவேகமானதும் அல்ல. இந்த பூமி நமக்கு எவ்வளவு சொந்தமோ அதே அளவு அவர்களுக்கும் சொந்தம்.

மேலும் படிக்க | முத்தமா குடுக்கற, இந்தா வாங்கிக்கோ: கிஸ் கொடுத்த இளைஞனை வெச்சி செஞ்ச பாம்பு, வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News