அய்யோ பாவம்..நாய் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு: திக் திக் வைரல் வீடியோ

Python Snake Viral Video: தற்போது வைரலாகி வரும் வீடியோவில், 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நாயை எப்படி பதம் பார்க்கிறது என்பதை நீங்கள் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 22, 2023, 02:09 PM IST
  • நாயின் கழுத்தை நெறித்த மலைப் பாம்பு.
  • கொடூரமான மலைப்பாம்பின் வீடியோ.
  • இன்றைய வைரல் வீடியோ.
அய்யோ பாவம்..நாய் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு: திக் திக் வைரல் வீடியோ title=

பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு. விலங்குகளின் வைரல் வீடியோவை காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மலைப்பாம்புகளுடன் மக்கள் மிக நெருக்கமாக இருப்பதையும் அவற்றுடன் விளையாடுவதையும் சமீப காலங்களில் அதிகம் கண்டு வருகிறோம். இது பற்றிய பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. எனினும், இவை சில சமயம் ஆபத்தாகலாம். அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது.

மேலும் படிக்க | Viral: ஜஸ்ட் மிஸ்... இளம்பெண்ணுக்கு மரண பயத்தை காட்டிய சுறா

நாய் கழுத்தை பிடித்துக்கொண்ட பாம்பு

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு மலைப்பாம்பு வயலில் இருப்பது தெரிகிறது. இந்த பாம்பு சுமார் 15 அடி நீளம் இருக்கும். மறுபுறம் அங்கு ஒரு குட்டி நாய் இருப்பதையும் நம்மால் காண முடிகிறது. முதலில் அந்த மலைப்பாம்பு அந்த குட்டி நாயை அட்டாக் செய்கிறது, பின்னர் பாவமாக இருக்கும் அந்த நாயை அந்த மலைப்பாம்பு கழுத்துப்பகுதியை பிடித்து வளைத்து அதை கொல்ல முயற்ச்சிக்கிறது. நீண்ட நேர முயற்சிக்கு பிறகு அந்த நாய் தப்பிக்க முடியாமல் திணறுகிறது. இந்த வீடியோ மிகவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. 

மலைப்பாம்பின் திக் திக் வைரல் வீடியோ
 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ eyes.3d என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | புலிக்குட்டியை துரத்தி துரத்தி கொத்தும் வாத்து வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News