பூனையுடன் கண்ணாம்மூச்சி விளையாடிய பச்சைக்கிளி! வைரலாகும் வீடியோ!
பச்சைக்கிளி ஒன்று ஜன்னலுக்கு வெளியே நிற்கும் பூனையுடன் கண்ணாம்மூச்சி ஆடிய காட்சி இணையத்தில் பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
பூனை மற்றும் கிளிக்கு இடையே நடக்கும் பல காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்தது. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பச்சைக்கிளி அமைதியாக இருக்கும் பூனையிடம் கீ..கீ. என்று கத்திகொண்டே அருகில் சென்று வம்பு செய்யும் காட்சி வைரலானது. அதேபோல மற்றொரு கிளி பூனையின் காதுகளை பிடித்து இழுத்தும் வம்பு செய்த காட்சி இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. இவ்வாறு விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இடையே நடக்கும் சின்ன சின்ன சண்டைகள் பலராலும் ரசிக்கப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது ஒரு கிளி பூனையிடம் கண்ணாம்மூச்சி விளையாடும் வீடியோ ஒன்று இணையவாசிகளை ரசிக்க வைத்துள்ளது.
மேலும் படிக்க | யார் பலசாலி.. வா மோதி பாத்திரலாம்.. சீசாவில் மோதிக்கொள்ளும் ஆடுகள்!
கிளி மற்றும் பூனையின் இந்த அழகிய தருணம் ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருக்கிறது. இதனை மொரிஸா ஸ்ச்வார்ட்ஸ் அவரது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில், பச்சைக்கிளி ஒன்றும், கருப்பு மற்றும் சாம்பல் நிறம் கலந்த பூனை ஒன்றும் இருப்பதை காணலாம். கிளியானது கண்ணாடி ஜன்னலுக்கு உள்ளே நின்று கொண்டு இருக்கிறது, அந்த கொழுகொழுவென்று இருக்கும் பூனையானது கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே நிற்கிறது. அப்போது அந்த கிளி வெளியே நிற்கும் பூனையை பார்த்து கீ..கீ என கத்திகொண்டே கீழே ஒளிந்துகொள்கிறது. அதனை அந்த பூனை தனது வாலை ஆட்டிக்கொண்டே அசையாமல் பார்த்து கொண்டு இருக்கிறது.
இந்த வீடியோரசிக்கும்படியாகவும் , நகைச்சுவையாகவும் இருக்கிறது. இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இதுவரை நாற்பத்தி ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் எமோஜிகளை கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | 'வேணாம்..விட்டுடுங்க...ப்ளீஸ்': வடிவேலு ஸ்டைலில் கெஞ்சிய சிங்கம், வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR