'வேணாம்..விட்டுடுங்க...ப்ளீஸ்': வடிவேலு ஸ்டைலில் கெஞ்சிய சிங்கம், வைரல் வீடியோ

Animal Video: காட்டின் ராஜாவான சிங்கம் எருமைக்கூட்டத்திற்கு பயந்து மரத்தின் மீது ஏறி உயிரை காப்பாற்றிக்கொள்ள முயல்வதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 12, 2022, 01:58 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
'வேணாம்..விட்டுடுங்க...ப்ளீஸ்': வடிவேலு ஸ்டைலில் கெஞ்சிய சிங்கம், வைரல் வீடியோ  title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

காட்டில் பிற மிருகங்களை சிங்கம் தன் இரையாக்குவதை நாம் அடிக்கடி பார்த்துள்ளோம். சிங்கத்தின் கர்ஜனை கேட்ட உடனேயே மற்ற விலங்குகள் அலறி அடித்துக்கொண்டு ஓடத் துவங்கும். ஆனால், சிங்கத்தை பழிவாங்க, அதன் அருகில் ஒரு மிருகம் செல்வதைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். 

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காட்டு விலங்குகளின் சமீபத்திய வீடியோ-வில், இதேபோன்ற ஒரு காட்சியைப் பார்க்க முடிகின்றது. காட்டின் ராஜாவான சிங்கம் எருமைக்கூட்டத்திற்கு பயந்து மரத்தின் மீது ஏறி உயிரை காப்பாற்றிக்கொள்ள முயல்வதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. 

சிங்கிளா மாட்டிக்கிட்ட சிங்கம் 

சிங்கம் வேறு எந்த மிருகத்தையும் கண்டு அச்சப்படும் என நாம் கனவிலும் யோசித்திருக்க மாட்டோம். ஆனால், இப்படியும் நடக்கும் என்பதை இந்த வீடியோ காண்பித்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், சிங்கத்தை பழிவாங்குவதற்காக ஏராளமான எருமை மாடுகள் காட்டுக்குள் செல்வதை காணமுடிகிறது. இத்தனை எண்ணிக்கையிலான எருமை மாடுகளைக் கண்டு பயந்துபோன சிங்கம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மரத்தின் மீது ஏறுகிறது. காணொளியை பார்க்கும் போது, தங்கள் கூட்டத்தில் ஒரு எருமையை தாக்கிய சிங்கத்தை பழிவாங்க எருமை கூட்டம் வருவது போல் தெரிகிறது. 

மேலும் படிக்க | திக்.. திக்..நொடிகள்’ புலியை வேட்டையாடிய ராட்சத முதலை - வைரல் வீடியோ 

சிங்கத்தை மிரட்டிய எருமைகளின் வீடியோவை இங்கே காணலாம்:

சிங்கம் மற்றும் எருமைகளின் வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோவில் காணும் காட்சி வியக்க வைக்கிறது. இந்த வீடியோவில் காணப்படுவது போல் சிங்கத்தின் இத்தகைய பரிதாபமான நிலை பொதுவாகக் காணப்படவில்லை. Wild_animal_shorts என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் பல்வேறு விதமான கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | சவாலுக்கு தயாரா! மானை குறிவைக்கும் விலங்கை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News