வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிளிகள் அழகான மற்றும் அதிக அறிவுத்திறன் கொண்ட பறவைகளாகும். அவை மனித பேச்சைப் பிரதிபலிக்கும் திறன் கொண்டவை. உலகெங்கிலும் உள்ள பலர் தங்களுடன் பேசக்கூடிய பல்வேறு வகையான கிளிகளை தங்கள் செல்லப்பிராணிகளாக வைத்திருக்கிறார்கள். பச்சை நிற கிளி ஒன்று குளியலறையில் ஆர்வமாக பாடும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. 


வீடியோவில், ஒரு நபர் தனது குளியலறையின் கதவை மெதுவாகத் திறப்பதைக் காண முடிகின்றது. அவர் கதவைத் திறப்பதற்கு முன்னரே, உள்ளிருந்து யாரோ பாடும் ஓசை கேட்கிறது. அந்த நபர் கதவைத் திறந்ததும், ஒரு கிளி ஒரு கழிப்பறை இருக்கையின் விளிம்பில் நின்று மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. 


மேலும் படிக்க | Viral Video: சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்ற பெண்... கடுப்பான கரடி! 


வீடியோவில் அந்த கிளி பாடுவதை பார்த்தால், அது மிகவும் மகிழ்ச்சியாக, பாடலில் ஆர்வமாக, மிகுந்த ஈடுபட்டுடன் பாடுவதகாத் தெரிகிறது. வீடியோவில் கிளி பாடியது மிரியம் ஹெர்னாண்டஸின் எல் ஹோம்ப்ரே க்யூ யோ அமோ என்ற ஸ்பானிஷ் பாடல் என இணையவாசிகள் கூறுகின்றனர். மனிதர்கள் பேசுவது போல் கிளி பேசுவதை பல வீஇயோக்களில் பார்த்துள்ளோம். ஆனால், இவ்வளவு அழகாக கிளி பாடுவதை காட்டும் வீடியோக்கள் மிக அரிதாகவே வெளிவருகின்றன.


குளியலறையில் கானம் பாடும் கிளியின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 



அழகான மற்றும் வேடிக்கையான விலங்கு வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளும் 'buitengebieden' என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ 697k வியூஸ்களையும் 327k லைக்குகளையும் பெற்று வைரல் ஆகி வருகின்றது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | குழந்தையை போல சறுக்கி விளையாடும் ஆட்டுக்குட்டி! வைரல் வீடியோ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ