Viral Video: சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்ற பெண்... கடுப்பான கரடி!

வன விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. இதில், சிலர் விலங்குகளுடன் செல்ஃபி எடுப்பதைக் காணலாம், சிலர் அதனை சீண்ட முயற்சிக்கின்றனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 8, 2022, 08:24 PM IST
  • வன விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.
  • வீடியோவில் ஒரு பெண் சிங்கத்துடன் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதை இதில் பார்க்க முடிகிறது.
  • நெட்டிசன்கள் அதிக அளவில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Viral Video: சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்ற பெண்... கடுப்பான கரடி! title=

சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன.  அதிலும் வன விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. இதில், சிலர் விலங்குகளுடன் செல்ஃபி எடுப்பதைக் காணலாம், சிலர் அதனை சீண்ட முயற்சிக்கின்றனர். சில நேரங்களில் விலங்கு கோபமடைந்து அவர்களைப் பழிவாங்கும். 

வைரலாகும் இந்த வீடியோவும் ஒரு சிறுமி, சிங்கம் மற்றும் கரடி தொடர்பான  வீடியோ தான்.  ஒரு பெண் சிங்கத்துடன் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதை இதில் பார்க்க முடிகிறது, அப்போதுதான் விஷயம் விபரீதமாகிறது. இந்த வைரல் வீடியோவில், ஒரு பெண் மிருகக்காட்சிசாலைக்கு சென்று விலங்குகளுடன் செல்ஃபி எடுக்கத் தொடங்குவதை நீங்கள் பார்க்கலாம். முன்னோக்கி நகர்ந்து, சிறுமி சிங்கத்தின் கூண்டுக்கு அருகில் வந்து அமர்ந்து செல்ஃபி எடுக்கத் தொடங்குகிறாள். ஆனால் அடுத்த நொடியே, அருகிம் இருந்த கூண்டில் அடைப்பட்டிருத கரடி அவளது சட்டையைப் பிடித்து இழுக்கத் தொடங்குகிறது. கரடியின் செயலால் சிறுமி சிறிது பதறுவதையும் வீடியோவில் காணலாம்.

மேலும் படிக்க | குட்டி யானைக்கு குசும்பு ஜாஸ்தி தான்... வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by  (@_hasret_kokulum_)

கரடி சிறுமியின் சட்டையை பிடித்து இழுத்தவுடன், அவளுடன் நின்ற நபர் அவளைக் காப்பாற்றுகிறார். சிறுமியின் செயல் கரடிக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.இந்த வீடியோ _hasret_kokulum_ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அதிக அளவில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | Viral Video: ‘எங்களுக்கும் தெரியும்... நாங்களும் வாசிப்போம்ல’; டிரம்ஸ் வாசிக்கும் யானை!

மேலும் படிக்க | Viral Video: காப்பாற்றிய பெண்ணிற்கு 'நன்றி' கூறிய குட்டி யானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News