ரயிலில் தூங்க தூளி கட்டி பல்பு வாங்கிய தில்லாலங்கடி: வீடியோ வைரல்
Viral Video: கூட்ட நெரிசல் மிகுந்த ஒரு ரயிலில் பயணி ஒருவர் படுக்க செய்த தில்லாலங்கடி வேலையின் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகடங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்த பயனர்கள் சிரித்து மகிழ்கின்றனர்.
வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
இந்தியா மக்கள்தொகை அதிகமாக உள்ள நாடு. சாலைகள், ரயில்கள், பேருந்துகள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டதை காணலாம். ரயில்கள் மக்கள் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தும் வாகனங்களாக உள்ளன. மக்கள் அதிகமாக பயணிக்கும் வழித்தடங்களிலும், விடுமுறை நாட்களிலும் அத்தனை சுலபமாக ரயில்களில் பயணிக்க டிக்கெட் கிடைத்துவிடுவதில்லை. ரயில்களில் ஜெனரல் பெட்டிகளில் மக்கள் அதிகமாக பயணிக்கின்றனர். இதில் சீட் பிடிக்க மக்கள் மோதிக்கொள்ளும் பல காட்சிகளை நாம் பார்த்துள்ளோம்.
ஜெனரல் பெட்டிகளில் சீட் கிடைத்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் சீட் கிடைக்காதவர்கள் ஒரு சிறிய இடமாவது உட்கார கிடைத்து விடாதா என்று எண்ணி அதற்காக பல முயற்சிகளை எடுக்கிறார்கள். அதுவும் இரவு நேர பயணமாக இருந்தால், சிரமம் இன்னும் அதிகமாகும். தூக்க கலக்கத்தில் நின்றுகொண்டு பயணிப்பது அசாத்தியமான ஒரு விஷயம்.
அப்படி கூட்ட நெரிசல் மிகுந்த ஒரு ரயிலில் பயணி ஒருவர் படுக்க செய்த தில்லாலங்கடி வேலையின் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகடங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்த பயனர்கள் சிரித்து மகிழ்கின்றனர்.
ரயிலில் படுக்க ஷார்ட் கட் தேடிய பயணி
ஒரு ரயிலில் இருக்கை கிடைக்காததால், பயணி ஒருவர் கோச்சின் மேல் பகுதியில் இருபுறமும் போர்வை ஒன்றை கட்டி அதில் படுக்க திட்டமிடுகிறார். வீடியோவின் தொடக்கத்தில் ஒரு ரயில் பெட்டியில் பல ரயில் பயணிகள் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. சீட் கிடைக்காத ஒரு பயணி கோச்சின் மேல்பக்கத்தில் ஒரு போர்வையை கொண்டு தொட்டில் போல கட்டுகிறார். இதைப் பார்த்த மற்ற பயணிகளும் அவரை உற்சாகப்படுத்த ஆரம்பித்தனர். ஆனால் அதன் பிறகு நடந்ததை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அந்த நபர் தன் காலணிகளை மின்விசிறியின் மீது வைத்து, தான் அமைத்த துணி ஊஞ்சலில் ஓய்வெடுக்க மேலே செல்கிறார். ஆனால், அந்த துணி போர்வையால் அவரது எடையை தாங்க முடியவில்லை. அதன் முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அந்த நபர் பெரிய சத்தத்துடன் கீழே விழுகிறார். இதனால் அவரது இடுப்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
ரயில் பயணியின் வேடிக்கை வீடியோவை இங்கே காணலாம்
இணையத்தில் வீடியோ வைரல் ஆனது.
இந்த வீடியோ (Viral Video) சமூக ஊடக தளமான எக்ஸ் -இல் @ChapraZila என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | நண்பேண்டா! முதலை கூட நட்பு பாராட்டும் ஜெண்டில்மேன் செய்த வேலை! ஷாக்கடிக்கும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ