சேம்சைடு கோல் போடுவதில் திமுக-வுக்கு இணை திமுக தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் ட்விட்டர் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் செப்டம்பர் 1-ஆம் நாள் முதல் தமிழகத்தின் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மட்டும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் சாலையில் அமைத்துள்ள 14 சுங்கச் சாவடிகளில் சுமார் 10% வரை கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது...


"கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகளில் 20% கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 10% முதல் 15% வரை கட்டணத்தை உயர்த்த, தேசிய நெடுஞ்சாலை துரை ஆணையம் முடிவு செய்திருப்பது கண்டத்திற்குறியது" என குறிப்பிட்டு இருந்தார்.


இந்நிலையில் MK ஸ்டாலின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...



"தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகளை அமைத்து வழிப்பறி செய்யப்படுகிறது: திமுக குற்றச்சாற்று - தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 45 சுங்கச்சாவடிகளில் 23 சாவடிகளை அமைத்தவர்  டி.ஆர்.பாலு தான் என்பதை தெரிந்து கொண்டே சேம்சைடு கோல் போடுவதில் திமுகவுக்கு இணை திமுக தான்!" என குறிப்பிட்டுள்ளார்.